வீழ்ந்து கொண்டிருக்கும் மதுரை மாவட்ட விவசாயிகளின் தற்போதைய நிலை… பதில் தருமா தமிழக அரசு.?

0
Follow on Google News

தற்போது உசிலம்பட்டி 58 பாசன கால்வாயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரையில் உசிலை தாலுக்கா 58 கிராம பாசன விவசாயிகள் தெரிவித்தனர். கலெக்டர் அனிஷ் சேகரிடம் மனு அளித்த பின் அவர்கள் கூறியதாவது. இத்திட்டம் மூலம் 110 கிராமங்கள் 30 கண்மாய்கள் 5 நீர்க்கசிவு குட்டைகள் நேரடி பயன்பெறும் .6000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 130 அடியும் , வைகைஅணையில் 66 அடி நீர் உள்ளது .வைகை அணையால் பயன்பெறும் மற்ற பாசன வசதிகளுக்கு தற்போது நீர் தேவைப்படாத நிலையில் உசிலம்பட்டி பகுதியில் நிலவும் வறட்சியை சமாளிக்க 58 கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஒரு பக்கம் ,மற்றொரு புறம் பேரையூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர் .வாழைத்தார்கள் பறிக்கப்படும் சூழலில் ஊரடங்கு அறிவித்ததன் காரணமாக உரிய விலை கிடைக்கவில்லை.

ஊரடங்கு முன் வாழைத்தார் ரூபாய் 150 முதல் 200 க்கு விற்கப்பட்டது. தற்போது ரூபாய் 40 கூட வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை .இதனால் விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் மற்றொருபுறம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்து 500 ஏக்கரில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா, கிரசாந்திமம், கார்நேஷன் போன்ற அலங்கார கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு கடந்த ஆண்டு கொரோனா காரணமாக , இம்மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன.

அதனால் வெளியூர் ,வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு பூக்களை அனுப்ப முடியாமல் பல கோடி
ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் பூக்களை பறித்து சந்தைப்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர் ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லாத போதும் செடிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கடன்வாங்கி மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பராமரிப்பு பணிக்காக விவசாயிகள் செலவு செய்கின்றன.

குலமங்கலம் அடுத்த குண்டு மாரண பள்ளியைச் சேர்ந்த விவசாயி ராமு வயது 52 மனம் தளர்ந்து தன் தோட்டத்தில் சாகுபடி செய்த இரண்டு லட்சம் ரோஜா பூக்களை பறித்து விற்பனை செய்ய முடியாததால் தீ வைத்து கொளுத்தினர். இவ்வாறாக பல தரப்பட்ட விவசாயிகளும் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் இந்த நிலை மாறுமா ?விவசாயிகளுக்கான தமிழக அரசு கை கொடுக்குமா…