நிர்வாணமாக வீடியோ கால்.! ஒருநாள் இரவுக்கு விலை எவ்வளவு.! துணிந்து வெளியிட்ட பனிமலர்… கொந்தளித்த பெண்ணியவாதிகள்..

0
Follow on Google News

பெண்ணியவாதி, செய்தியாளர், பெரியாரிஸ்ட் என பல கோணங்களில் அறியப்பட்டவர் பனிமலர் பன்னீர்செல்வம், பெரியார் மட்டும் தற்போது உயிரோடு இருந்திருந்தால் நானே அவரை திருமணம் செய்திருப்பேன் என மேடையில் பேசிய அவரின் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி பிரபலம் அடைந்தவர், தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்கும் பனிமலர் தனது கொள்கைக்கு எதிராக யாராக இருந்தாலும் துணிந்து விமர்சனம் செய்ய கூடியவர்.

அந்த வகையில் கடந்த வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகர் புகைப்படத்தை பதிவு செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, இது தேவையில்லாத ஆணி என பதிவு செய்து எதிர்ப்பு தெரிவித்தவர் பனிமலர். இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளம் மூலம் வியாபார நிறுவனகளை ப்ரோமோஷன் செய்து வருகிறார் பனிமலர், இதன் மூலம் அவர் வருமானம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கடை திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக வர வேண்டும் என பனிமலர் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு ஒருவர் கேட்டுள்ளார், இதற்கு பனிமலர் சம்மதம் தெரிவிக்க, பின் எவ்வளவு என விலை பேசி அதற்கான தொகையையும் பனிமலர் தெரிவித்துள்ளார், ஆனால் அந்த நபர் கடை திறப்புக்காக உனக்கு ஒரு லட்சம் தருகிறேன், என்னுடன் ஒரு நாள் இரவு தங்க வேண்டும் அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் என பணிமலரிடம் செய்தி அனுப்பியுள்ளார்.

இது குறித்து பனிமலர் தெரிவித்ததாவது, கடை திறப்புக்கு கேட்டுட்டு, ஒரு நைட்டுக்கு இவன் எவ்ளோ வேணாலும் தரானாம். பெண் தொழில் முனைவோருக்கு விளம்பரம் பண்ணும்போது 1 மணி நேர வீடியோல 10 நிமிசம் அநாவிசயமா யாரயும் தொந்தரவு பண்ணாதீங்கனு சொல்றேன். அப்பவும் இது நடந்துட்டேதான் இருக்கு. இன்னைக்கு ஒரு அக்காட்ட பேசும்போது லைவ் முடுஞ்சதும் வீடியோ கால் வந்துச்சுமா நிர்வாணமா நிக்குறான்னு லட்ரலி அழுகுறாங்க. எவ்ளோ கேவலம் இதெல்லாம்.

பெண்கள் வேலை செய்யலனா செய்யலனு சொல்றோம் செய்யும்போது இப்டி தொந்தரவு செஞ்சா அவுங்களும் என்னதான் செய்வங்க. இதும் இந்திகாரனுக நிறைய பேர் இப்டி திரியுறானுக. ஆண்கள் இது மாதிரி செய்யும்போது நம் வீட்டு பெண்கள்கிட்டயும் யாரோ இப்டி நடந்துக்குவாங்கனு நினைவிருக்கட்டும். பெண்களைக்கு இதுக்கெல்லாம் பயந்து நாம வேலை செய்யாம இருக்கமுடியாது, தைரியமா டீல் பண்ணுங்க.

அது மாதிரி பண்ற பெரும்பாலானவுங்க தன்நம்பிக்கை இல்லாத பயந்தாகோலிகதான் நீங்க சத்தமா பேசுனாலே ஓடிருவானுக என பனிமலர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இதனால் பனிமலருக்கு ஆதரவாக கொந்தளித்த பெண்ணியவாதிகள் தனக்கு தவறான செய்தி அனுப்பியவர் தொலைபேசி என்னை பொது தளத்தில் துணிந்து வெளியிட்ட பனிமலர் அவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.