திமிறி ஏழுந்த திருமாவளவன்… அடங்கிய முதல்வர் முக ஸ்டாலின்..! தமிழக அரசியலில் பரபரப்பு…

0
Follow on Google News

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்ற நிலையில், தி.மு.க. சார்பில் 20 மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்ட பட்டியலில் மறைமுக தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வினர். எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர், இந்த விவகாரம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு உள்ளே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திமுகவை எதிர்க்கு கூட்டணி காட்சிகளில் இருந்து யார் குரல் கொடுப்பது என பலர் தயக்கம் காட்டி வந்த நிலையில் அடங்க மறு.. அத்து மீறு.. திமிறி ஏழு …திருப்பி அடி என விடுதலை சிறுத்தை கட்சியின் கொள்கைக்கு ஏற்ப திமிறி எழுந்த அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்ததாவது. மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்,

திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ‘ராஜினாமா’ செய்ய வைத்து ‘கூட்டணி அறத்தைக்’ காத்திட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் திருமாவளவன் ஓங்கி குரல் கொடுக்க திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் இதற்கு திருமாவுக்கு ஆதரவை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் முக ஸ்டாலின்,

“கடமை – கண்ணியம் – கட்டுபாடு”தான் கழகத்தவருக்கு அழகு! அதனை மீறி மறைமுகத் தேர்தலில் சாதித்துவிட்டதாகச் சிலர் நினைக்கலாம்; குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமை உணர்வு எக்காலத்திலும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

தோழமைக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாகப் பொறுப்பை விட்டு விலக வேண்டும், விலகாவிட்டால் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்புக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், தனக்குத் தொடர்பில்லை என்றாலும் பொறுப்பிருக்கிறது என்பதை உணர்ந்து ‘கூட்டணி அறத்தைக்’ காக்கும் வகையில் உடனடி வினையாற்றிய மாண்புமிகு முதல்வர் அண்ணன் தளபதி முக ஸ்டாலின் அவர்களின் பக்குவம்நிறைந்த ஆளுமையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். தளபதி அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.