இவர்களின் குறி அண்ணாமலை தான்… சர்ச்சையில் சிக்கியுள்ள war room முழு பின்னணி என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை காயத்ரி ரகுராம் குறித்து சமூக வலைதளத்தில் ஒருவர் மறைமுகமாக விமர்சனம் செய்து பதிவு செய்ததை பாஜக நிர்வாகி ஒருவர் லைக் செய்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்த காயத்ரி ரகுராம், தன்னை விமர்சனம் செய்த பதிவை லைக் செய்த நபர் தான் வார் ரூமை தலைமை ஏற்று நடந்துகின்றவர், அந்த வார் ரூமில் 2000 பேர் வேலை செய்கிறார்கள் என்று தெரிவித்தவர்.

மேலும் இவர்கள் என்னை மற்றும் பாஜக மூத்த தலைவர்களை கிண்டல் செய்வது தான் இவர்களுடைய வேலை, என ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்து மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார் காயத்ரி ரகுராம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு கோடிப்பு, என வரும் காமெடி கட்சி போன்று வார் ரூமில் 2000 பேர் வேலை பார்க்கிறார்கள் என கிளப்பி விட்ட காயத்ரி ரகுராம் குற்றசாட்டு நம்பும் படி இல்லை என்றாலும் கூட.

அண்ணாமலையின் அசூர வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாமல், ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும். வாடி இருக்குமாம் கொக்கு. என்பது போல அண்ணாமலைக்கு எதிராக அரசியல் செய்ய எதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருந்த எதிர்க்கட்சிகள் வார் ரூம் சர்ச்சையை கையில் எடுக்க, அதே போன்று அண்ணாமலையை வீழ்த்த நேரம் பார்த்து காத்திருந்த காயத்ரி ரகுராம் போன்ற உட்கட்சியினரும் இந்த வார் ரூம் சர்ச்சையை ஊதி பெரிதாக்கினார்கள் என கூறப்படுகிறது.

எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு காரணம் வார் ரூம் தான் என குறிப்பிட்டு ஒரு கும்பல் குற்றசாட்டு வைத்து வருவதை தொடர்ந்து, வார் ரூம் என சொல்லப்படும் அந்த அலுவலகம் குறித்து விசாரித்ததில் சில தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக இதற்கு முன்பு இருந்த அரசியல் ஜாம்பவங்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு சில உதவியாளர்கள் இருப்பார்கள், அவர்கள் அந்த தலைவர்கள் மேடையில் பேசுவதற்கு அறிக்கை தயார் செய்வது, மற்றும் அவர்களுக்கு தேவையான தரவுகளை சேகரித்து புள்ளி விவரங்களை எழுத்து வடிவில் பேப்பரில் தயார் செய்து தருவார்கள்.

ஆனால் தற்பொழுது டிஜிட்டல் உலகமாக மாறியுள்ளதால் இணைய வாயிலாக உதவியாளர்கள் வேலை செய்வதற்காக அனைத்து அரசியல் தலைவருக்கும் ஒரு அலுவலகம் இருப்பது போன்று பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர்களுக்கும் ஒரு அலுவலகம் இருக்கிறது, இந்த அலுவலகத்தில் சுமார் 10 நபர் வரை வேலை செய்து வருவதாகவும், பாஜக தலைவர் அண்ணாமலை மேடையில் பேசுவதற்கான டேட்டாக்களை எடுத்து தருவது.

மேலும் திமுகவினர் பாஜக மற்றும் அண்ணாமலைக்கு எதிராக பேசுவதர்க்கு பதில் கொடுக்கும் வகையில் டேட்டாக்களை எடுத்து தருவது. இதற்கு முன்பு அரசியல் ஜாம்பவான்களாக இருந்த கருணாநிதிக்கு உதவியாளராக இருந்த சண்முகநாதன், அதே போன்று ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்த பூங்குன்றனார், மருது அழகு ராஜ் போன்று அண்ணாமலை அரசியலுக்கும் பக்க பலமாக இருந்து வருகிறார்கள் வார் ரூம் என்று சொல்லப்படும் அலுவகலகத்தில் செயல்படும் உதவியாளர்கள்.

இந்த நிலையில் அண்ணாமலையின் அரசியல் வளர்ச்சிக்கும், ஆளும் திமுக அரசுக்கும் எதிராக புள்ளி விவரங்களுடன் அண்ணாமலை பேசுவதர்க்கு பக்க பலமாக இருக்கும் அவர்களுடைய உதவியாளர்கள் ஆளும் கட்சிக்கும், மேலும் அண்ணாமலை அசூர வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாதவர்களுக்கும் மிக பெரிய தலைவலியாக இருந்து வருகிறார்கள்,

இதனால் 10 பேர் செயல்படும் அலுவலகத்திற்கும் வார் ரூம் என பெயரிட்டு மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி அன்னமலைக்கு பக்க பலமாக செயல்பட்டு வரும் அந்த அலுவகத்தில் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றவர்கள் நோக்கம் வார் ரூம்க்கு எதிராக கிடையாது, அவர்களின் ஒரே குறி அண்ணாமலையை வீழ்த்துவதற்காக கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் வார் ரூம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.