இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டும், கட்டுப்படுத்த முடியாத பெண்ணின் ஆசையால் தென்காசியில் நடந்த விபரீதம்….

0
Follow on Google News

தென்காசி, அண்ணா நகர் பகுதியில் நாலு வருடம் முன்பு தனது கணவர் தங்கராஜுடன் வசித்து வந்தார் அபிராமி. இவர் சொந்தமாக பியூட்டி பார்லர் ஒன்று வைத்துள்ளார். அபிராமி கணவர் தங்கராஜ் தற்கொலை செய்து கொண்டு நாலு வருடங்கள் ஆனது. இவர்களுக்கு இரண்டு 2 குழந்தைகளுக்கு உள்ளனர். கணவரை இழந்த 33வயது அபிராமிக்கு தென்காசி அருகில் உள்ள அருணாசலபுரம் பகுதியில் வசித்து கண்ணன் என்பவரின் மகன் காளிராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டு கடைசியில் காதலில் முடிந்தது.

காளிராஜ் 23 வயதுடைய வாலிபர் என்பதால் வயது கோளாறால் 10 வயது வித்தியாசம் உடைய அபிராமி வலையில் விழுந்தார். காளிராஜ் அபிராமியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்க காளிராஜ் பெற்றார்கள் தடுக்க எதிர்ப்புகளை மீறி திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் 2017ஆண்டு நடைபெற்றது. மூத்த வயதுடைய பெண்ணுடன் திருமண வாழ்க்கை காளிராஜ்க்கு நன்றாக சென்றது.

ஆனால் அபிராமி ஆட்டமோ நிற்கவில்லை. குத்துக்கல்வலசை பகுதியில் ஒர்க் ஷாப் வைத்திருந்த மாரிமுத்து உடன் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்தது. இந்த விஷயம் தெரிந்த 2வது வாலிப கணவர் காளிராஜ் தட்டி கேட்க, இங்கே நம்ம புனிதமான ரகசிய காதலை பிரித்து விடுவேனா என்று அபிராமியும் புதிய காதலன் மாரிமுத்துடன் இணைந்து காளிராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

காளிராஜ்க்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துவிட்டு தனது ரகசிய கள்ளக்காதலன் உடன் இணைந்து காளிராஜை கழுத்தை இருக்க நெரித்து கத்தியால் குத்திக் கொன்று உள்ளனர். இந்த சம்பவம் நடந்தது 2018 ஆண்டு செப்டம்பர் மாதம். இந்த சம்பவம் விஷயம் அபிராமி வீட்டு பால்கார் முருகேசனுக்கு தெரிந்து விட்டது. இதனால் முருகேசனிடம் காளிராஜ் உடலை வெளியே கொண்டுபோய் மறைக்க உதவி கேட்க, முருகேசன் வீட்டிலேயே புதைக்கும் படி ஆலோசனை கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அதேபோல் வீட்டிலேயே புதைத்து விட்டனர் அபிராமியும் மாரிமுத்துவும் சோர்ந்து. அபிராமியின் 2வது கணவர் காளிராஜை தேடி பெற்றார்கள் வந்துள்ளனர். அபிராமி காளிராஜ் வெளியூருக்குச் சென்று விட்டதாக கூறி இரண்டு வருடத்தை கடத்தி விட்டனர். அப்பாது தான் அபிராமிக்கும் மாரிமுத்துவுக்கு உள்ள கள்ள தொடர்பு வெளிவர தொடங்கியது. காளிராஜ் தாய் காவல் துறையிடம் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கூறினார்.

அபிராமியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த போலீசார். அபிராமியையும் மாரிமுத்துவையும் தீவிர விசாரணைக்கு பிறகு உண்மை வெளிவந்தது. தாசில்தார் தலைமையில் காளிராஜ் புதைத்த இடத்தில் இருவரும் கொடுத்த தகவலின் படி அவரின் உடலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மண்டையோடு மற்றும் எலும்புக்கூடுகளும் வெளிவரத் தொடங்கியது. காளிராஜின் மனைவி அபிராமியின் கள்ளக்காதலன் மாரிமுத்துவின் அவர்கள் செய்த கொலை தெரிந்தும் வெளியில் சொல்லாமல் மறைத்த பால்காரரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். இரண்டு வருடமாக காளிராஜ் வெளியூர் சென்று விட்டதாக ஏமாற்றி வந்தது தற்போது காவல் துறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டனர். அபிராமின் விபரித ஆசையால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.