பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன பா.சிதம்பரத்துக்கு வித்தியசமாக பதிலளித்த H.ராஜா.!

0
Follow on Google News

தமிழகம் கேரளா புதுச்சேரி அசாம் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது, மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது கடினம் என்பதால் எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை தேர்தல் முடிந்த நிலையில் இன்னும் மூன்று கட்ட தேர்தல்கள் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரை பரபரப்பாக நடந்து வருகிறது, மம்தா பானெர்ஜி கோட்டை என வர்ணிக்கப்படும் மேற்கு வங்கத்தை இம்முறை பாஜக கைப்பற்றிய ஆக வேண்டும் என தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் பரப்புரை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் பிரதமர் மோடி, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மேற்கு வங்கத்தை எப்படியாவது கைப்பற்றி மாநிலத்தில் ஆட்சி அமைக்க நடத்தும் போராட்டத்திற்கு மத்தியில் நெருக்கடியை சமாளிக்க பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரம் செலவிட்டுள்ளார் இதற்காக அவருக்கு என பா சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பா சிதம்பரம் பிரதமர் மோடிக்கு நன்றி சொன்னதற்கு பதில் தரும் விதத்தில் பாஜக காரைக்குடி சட்டமன்ற வேட்பாளர் H.ராஜா தனது டிவீட்டர் பக்கத்தில், தாங்களும் தங்கள் குடும்பமும் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் போராட்டத்திற்கு (106 நாள் திஹார் அனுபவம் நினைவிருக்கும்) இடையில் காரைக்குடி தொகுதிக்கு நேரம் ஒதுக்கியதற்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனராமே என பதிவு செய்துள்ளார்.