செய்தியாளர் சந்திப்பில் உரிமையுடன் குஷ்பூ தோல் மேல் கை வைத்தவர் யார் தெரியுமா.? வைரலாகும் சர்ச்சைக்குரிய புகைப்படம்..

0
Follow on Google News

காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் நடிகை குஷ்பு, இவர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் முன்னிலையில், பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். பின்னர் டெல்லியில் உள்ள செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவேன். மேலும் பிரதமர் மோடி மாதிரியான ஒரு தலைவரால்தான் நாடு முன்னேற முடியும். நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார்.

பிரதமர்மோடி போன்ற தலைமை நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம். காங்கிரசில் இருந்தபோது பல விவகாரங்களில் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளேன். நாட்டிற்கு எது நல்லது என்பது போகப்போக புரிந்தது. மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு. நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜகவில் இணைந்துள்ளேன். என தெரிவித்தார்,

டெல்லி சென்று பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சென்னை திரும்பியவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களே சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது, பின்னர் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நிறைய மகிழ்ச்சியோடு டெல்லியில் இருந்து திரும்பியுள்ளேன். தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. பாஜகவில் இருக்க முக்கியக் காரணம் மாநிலத் தலைவர் முருகன் எடுத்த முக்கிய முயற்சிதான். அவர் எடுத்த முயற்சியால்தான் பாஜகவில் இணைந்துள்ளேன்.என தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லியில் நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் பின்னல் இருந்த அவருடைய உடன் பிறந்த சகோதரர் தனது தங்கை தோல் மேல் கை வைத்து அரவணைத்து அவரை அழைத்து சென்றார், ஆனால் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் சிலர் தவறாக சித்தரித்து கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது,

error: Content is protected !!