100 மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்க உதவும் ரஜினிகாந்த்!

0

நடிகர் ரஜினிகாந்தின் 71 ஆவது பிறந்தநாள் டிசம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வழக்கமாக ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பரபரப்பாக இருக்கும். ஏனென்றால் அவரின் படங்கள் பற்றிய அப்டேட்டோ அல்லது அரசியல் வருகை பற்றிய அவரின் கருத்துகளையோ எதிர்பார்த்து ரசிகர்கள் அவர் வீட்டு முன்பு காத்திருப்பார்கள்.

ஆனால் இந்த முறை எந்த பரபரப்பும் இல்லாமல் சிறப்பாக பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார் ரஜினிகாந்த். வழக்கம் போல சில ரசிகர்கள் மட்டும் வீட்டுக்கு முன் வந்து காத்திருந்து ரஜினியைப் பார்க்க முடியாமல் ஏமாந்து திரும்பினர். இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி அவரின் இளையமகள் சௌந்தர்யா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘100 பொருளாதார பின் தங்கிய மாணவர்களின் டி என் பி எஸ் சி தேர்வு எழுதுபவர்களுக்கான கோச்சிங் பொறுப்பை தங்கள் அமைப்பு ஏற்றுக்கொள்ளும்’ என அறிவித்துள்ளார். மேலும் இந்த பொறுப்பை ஏற்று நடத்த உள்ள அதிகாரிகளின் பெயர்களையும் அறிவித்துள்ளார்.