வலிமை படைக்கப் போகும் சாதனை… 8 காட்சிகளுக்கு முயற்சி செய்யும் திரையரங்குகள்!

0
Follow on Google News

வலிமை படத்தின் ரிலீஸின் போது நள்ளிரவுக் காட்சிகளுக்கு அனுமதி வாங்கி 8 காட்சிகள் ஓட்ட திரையரங்குகள் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித், கார்த்திகேயா மற்றும் ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பின்னர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளதாக முன்னதாகவே அறிவித்துவிட்டனர்.

இதையடுத்து வலிமை படத்தின் வியாபார பணிகள் நடந்துவரும் நிலையில் ப்ரமோஷன் பணிகளையும் படக்குழு தொடங்க உள்ளதாம். படத்தின் முக்கியமான அம்சமாக பைக் ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. அந்த காட்சிகள் உலகத்தரத்தில் எடுக்கப்பட்டுள்ளனவாம். இந்நிலையில் இந்த ஸ்டண்ட் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விரைவில் வலிமை படக்குழு வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வலிமை ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இனிமேல் அடிக்கடி இப்படி அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் என படக்குழு முடிவு செய்து வேலைகளில் இறங்கியுள்ளது.