மதுரையில் புனிதமான கலா மலை கோவிலில் காதல் லீலைகள். நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வேண்டுகோள்…

0
Follow on Google News

மதுரையில் 300 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற தலத்தில் காதல் பெயரில் நடக்கும் காம களியாட்டங்கள் முகம் சுழிக்க வைக்கின்றது. மதுரையில் இருந்து 4 1/2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மடக்குளத்தில் தான் கலா மலை. அதன் அருகில் பசுமலையும் அமைந்துள்ளது. கலா மலையில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த கபாலீஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மதுரையில் மூன்றாவது பெரிய கண்மாய் என மாடக்குளம் கண்மாய் இங்குதான் அமைந்துள்ளது.

இந்த மலை கோவில் கொஞ்சம் ஒதுக்குபுறமாக அமைந்துள்ளது. இங்கு யார் வந்து போனாலும் தெரியாது. வாரம் வாரம் வெள்ளிக்கிழமை மட்டும் தான் இந்த மலை கோவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் பெண்கள் கூட்டம் தான் ஏறலாம். மற்ற நாட்களில் வெறிச்சோடி கிடக்கும். இந்த இடத்துக்கு காதலர்கள் தற்போது தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

காதல் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் பெண்களை இந்தப் புனிதமான மலைக்கு கூட்டிச்சென்று சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் இவர்களை கண்டித்தாலும் இவர்கள் வேறு சிலர் குறுக்கு பாதையில் மலையேறி தங்கள் காதல் லீலைகளை தொடர்கிறார்கள்.

மேலும் விபச்சாரங்களும் கொடி கட்டிப் பறக்கிறது. அந்த பகுதியில் பயன்படுத்திய ஆணுறைகள் கிடப்பதை பார்க்க முடிகிறது, காவல்துறையும் பலமுறை படித்து எச்சரிக்கை விடுத்தும் இது குறைந்தபாடில்லை. 300 ஆண்டுகள் பழைமையான புனித இடத்தை பாதுகாப்பது நமது கடமை.