நோய் எதிர்ப்பு சக்தி தரும் “பூண்டு பால் செய்வது எப்படி?

0
Follow on Google News

அனைவருக்கும் வணக்கம், இன்று நம் ஆரோக்கிய சமையலில் நாம் காணப்போவது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் “பூண்டு பால் செய்வது எப்படி?” என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-
★காய்ச்சிய பால் – 250மிலி
★உரித்த பூண்டு பற்கள் – 15
★பனங்கற்கண்டு – சிறிதளவு
★மஞ்சள் தூள் – தேவையான அளவு

செய்முறை:- பாலை காய்ச்சிய பின் அதில் பூண்டு பற்களைப் போட்டு அடுப்பினை சிம்மில் வைத்து விடவேண்டும். 5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து அடுப்பினை அமர்த்திக்கொண்டு, தேவையான அளவு மஞ்சள் தூள், பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து பருகலாம். இது உடலுக்கு வலிமையும் வாய்வு தொந்தரவையும் போக்கும். இத்தகைய சிறப்புடைய பூண்டுப் பாலினை நீங்கள் அனைவரும் வீட்டில் செய்து பார்த்துப் பயன்பெறுங்கள்.

நன்றி ~திருமதி க.சுகன்யா தேவி முத்துராமன் இந்த ரெசிபியை வீடியோவில் காண கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்

error: Content is protected !!