முக.ஸ்டாலின் – எடப்பாடி கூட்டு சதியால் குஷ்புவுக்கு சேப்பாக்கம் தொகுதி மறுக்கப்பட்டதா.? கிடைத்த தொகுதியில் சிக்ஸர் அடிக்கிறார் குஷ்பு.!

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு சில தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக தலைமை, அதில் சேப்பாக்கம் தொகுதியில் நடிகை குஷ்பு, ராஜபாளையம் தொகுதியில் நடிகை கவுதமி ஆகியோரை நியமித்தது, இவர்களும் அந்தந்த தொகுதிகளில் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வந்தனர், மேலும் இவர்களுக்கு தான் இந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என பரவலாக செய்திகள் வெளியானது.

ஆனால் ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால், நடிகை கௌதமி வாய்ப்பு வழக்கப்படவில்லை, ஆனால் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிடுவதால் அதிமுக-திமுக இடையே திரைமறைவு அரசியல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது, சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பு போட்டியிடுவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் தேர்தல் அலுவலகம் அமைத்து தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு.

ஆரம்பத்தில் சேப்பாக்கம் திமுகவுக்கு சாதகமான தொகுதி என பேசப்பட்டு வந்தது, ஆனால் குஷ்பு அந்த தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கினர், மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது, ஏற்கனவே குஷ்பு திமுகவில் இருந்த போது அந்த தொகுதியில் திமுக வெற்றிக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்தார், அதனால் இந்த தொகுதி அவர்க்கு ஏற்கனவே நன்கு பழக்கப்பட்ட தொகுதி என்பதால், சேப்பாக்கம் தொகுதி குஷ்புக்கு ஆதரவாக இருந்தது, வேட்பாளராக குஷ்பு நிறுத்தப்பட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தததை காண முடிந்தது.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த நிலையில் நடிகை குஷ்பு போட்டியிட்டால், உதயநிதி வெற்றி பெறுவது கடினம் என அறிந்த திமுக நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் திரைமறைவில் சில ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறபடுகிறது. அதாவது சேப்பாக்கம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க கூடாது, அப்படி செய்தால் உங்களுக்கு சாதகமா ஒரு சில தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக ஸ்டாலின் – எடப்பாடி பழனிச்சாமி இடையே நடந்த இந்த திரைமறைவு ஒப்பந்தத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து, பாஜக சென்னையில் கேட்ட சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு தொகுதியில், சேப்பாக்கம் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கி குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

குஷ்பு எதிர்பார்த்த சேப்பாக்கம் தொகுதி, அதிமுக-திமுக கூட்டு சதியால் போட்டியிட வாய்ப்பை இழந்தாலும், கிடைத்த ஆயிரம் விளக்கு தொகுதியில் தனது தீவிர பிரச்சாரத்தின் மூலம் எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு கடுமையான போட்டியை ஏற்றப்படுத்தி வருகிறார், தற்போது உள்ள கள நிலவரம் தொடர்ந்தால் குஷ்பு வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முக ஸ்டாலின் – எடப்பாடி கூட்டு சதியால் சேப்பாக்கத்தில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தாலும் , கிடைத்த தொகுதியில் குஷ்பு சிக்ஸர் அடித்து வருவதாக அரசியல் பார்வையளர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.