லாக்கப் மரணம்… கொலை வழக்காக பதிவு..முதல்வர் முக ஸ்டாலின் விளக்கம்..!

0
Follow on Google News

சென்னை : திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் கொலை கொள்ளைகள் லாக்கப் மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் மூன்று லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துவிட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார்.

இதனிடையே கஞ்சா கடத்திய வழக்கில் 25 வயதான விக்னேஷ் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். கைதுசெய்ய முயற்சிக்கையில் போலீஸ் ஒருவரை விக்னேஷ் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் விக்னேஷை கைதுசெய்த போலீசார் சிறையிலடைத்தனர். சிறையில் விக்னேஷை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து மறுநாள் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பல அதிர்வலைகளை உண்டுபண்ணியது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு சப் இன்ஸ்பெக்டர் ஒரு கான்ஸ்டபிள் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் நேற்று பல போலீசார் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பேசிய காவல்துறை உயரதிகாரி ” நாங்கள் எஸ்சி.எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.விரைவில் தொடர்புடைய அதிகாரிகள் கைதுசெய்யப்படுவார்கள்” என தெரிவித்தார். மேலும் சட்டசபையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்தார். இந்த தீர்மானத்திற்கு முதல்வர் முக.ஸ்டாலின் பதிலளித்தார்.

அவர் கூறியதாவது “எதிர்க்கட்சி தலைவர் கூறியதைப்போலா பிரேதபரிசோதனையில் மரணமடைந்தவர் உடலில் 13 காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்த வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என அவையில் கூறினார்.

மனித உரிமைகள் அமைப்பான பீப்பிள்ஸ் வாட்ஸின் நிர்வாக இயக்குனர் ஹென்றி கூறுகையில் “விக்னேஷ் இரவு 11 மணி முதல் 3.30 மணிவரை போலீசாரால் தாக்கப்பட்டுள்ளார்” என கூறினார். சம்பவம் நடந்த இடத்தில இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில் போலீசார் விக்னேஷை விரட்டி சென்று தாக்கியது பதிவாகியுள்ளதாகவும் அதை நேரில் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.