கல்லூரி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி… மனதை உருக்கும் மாணவி எழுதிய கடிதம்..!

0
Follow on Google News

கடலூர் : கடலூரில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அந்தக்கடிதம் படிக்கும் அனைவரின் மனதையும் உருக்குவதாக அமைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சின்னப்ப சமுத்திரம் கிராமப்பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் தனலட்சுமி வயது 19. இவர் கடலூர் செம்மண்டலம் புகுத்தியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு பயின்றுவருகிறார். இந்த கல்லூரியில் தற்போது மாதிரி தேர்வுகள் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவி கல்லூரியின் பின்புறத்தில் உள்ள கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கழிப்பறை சென்ற அவர் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. சிறிதுநேரத்தில் கழிவறைக்கு வந்த மாணவிகள் தனலட்சுமி தூக்கில் தொங்குவதை கண்டு அலறியடித்து ஓடியுள்ளனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் விரைந்துவந்து சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

கடலூர் புதுநகர் போலீசார் மாணவியின் பேக்கை சோதனையிட்டதில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் “நல்லா படிடா சத்தி. அப்பா அம்மாவ நல்லா பாத்துக்கோ. டெய்லி நவீனுக்கும் நிஷாந்திக்கும் பாடம்சொல்லிக்குடு. ஒத்துமையா இருங்க. சண்டையெல்லாம் போடாதீங்க. சீக்கிரமா வீடு கட்டிருங்க. என்னோட வாட்சை நிஷாந்திக்கு குடுத்துடு.

யாரையும் நம்பவேணாம். இது போலியான உலகம். லவ்யூடா சத்தி. ஆயாவுக்கும் அப்பாவுக்கும் அம்மாவை சாப்பாடு தரச்சொல்லு. எனக்கு நான் பெயில் ஆயிடுவனோன்னு பயமா இருக்கு. அதனால போயிடலாம்னு முடிவெடுத்துட்டேன். என்னோட அப்பாதான் எனக்கு உயிர். அப்பா ஐ லவ் யூ அப்பா” என அந்த கடிதத்தில் தனலட்சுமி உருக்கமாக எழுதியுள்ளார். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியே சோகத்துக்குள்ளாகியிருக்கிறது