புதிய தொழிலை தொடங்கிய முதல்வர் குடும்பம்..! என்ன தொழில் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டாலும் அவரது குடும்பம் ஒவ்வொரு துறையிலும் கால் பதித்துவருகின்றனர். அதிலும் உதயநிதி பேனரான ரெட்ஜெயண்ட் மூலம் இந்த வருடத்தில் மட்டும் 12க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலின் மற்றும் அவரது கணவர் சபரீசன் இருவரும் ரியல் எஸ்டேட் துறையில் புதிதாக நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மு.க ஸ்டாலின் முதல்வரான உடன் அவரது மருமகன் சபரீசன் நான்கு நிறுவனங்களுக்கு இயக்குனர் பதவியேற்றுள்ளார். மேலும் செந்தாமரை ஸ்டாலின் மூன்று நிறுவனங்களுக்கு இயக்குநராகியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கடந்த ஏப்ரல் 28 அன்று செந்தாமரை ஸ்டாலின் மற்றும் அவரது கணவர் சபரீசன் மற்றும் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினரான மோகன் என்பவரின் மகன் கார்த்திக் ஆகிய மூவரை இயக்குனர்களான கொண்டு சேசாக் ரியால்ட்டர்ஸ் என்ற பெயரில் பத்துலட்சம் முதலீட்டில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் போக பெனின்சுலார் ரிசர்ச் ஆபரேஷன் பிரைவேட் லிமிடெட், சன்ஸைன் வெல்பேர் பவுண்டேசன்,சன்சைன் புட் அண்ட் பிவரேஜஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கடந்த ஒருவருடத்தில் அதாவது கடந்த மே 2021 முதல் சபரீசன் இயக்குநராகியுள்ளார். இதேபோல செந்தாமரை ரேய்ஸ் சன்சைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவரது பங்குதாரராக எழிலரசி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த நாள்முதல் செந்தாமரை மற்றும் சபரீசன் ஆகியோர் 13க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்களை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.