வெளியே செல்ல முடியாது…. பாஜக தலைவருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஆர்.எஸ்.பாரதி..!

0
Follow on Google News

திண்டுக்கல் : திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வில்லங்கமாக பேசுவதில் வல்லவர். தலித்துகளுக்கு நாங்கள் போட்ட பிச்சை நீதிபதி பதவி என்று கூறியதுடன் தமிழக மீடியாக்களை ரெட்லைட் என பகிரங்கமாக செய்தியாளர்களிடம் கூறினார். இப்படி எந்த ஒரு கருத்தை கூறினாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படாமலே இருப்பது ஆச்சர்யத்தை வரவழைத்துள்ளது.

இந்நிலையில் திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கிழக்குமாவட்ட செயலாளர் மற்றும் பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஐ.பி.செந்தில் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு பொதுச்செயலாளரும் சர்ச்சைநாயகனுமான ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

மேலும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ். பாரதி ” தமிழக முதல்வரின் திட்டங்களை அனைவரும் காப்பியடிக்கின்றனர். தமிழகத்தில் நடக்கும் திராவிடமாடல் ஆட்சியை காப்பியடித்தே உத்திரபிரதேச தேர்தலில் மோடி வென்றுள்ளார்.

பிஜேபிக்காரர்கள் பிள்ளைபிடிக்கும் வேலையை செய்துவருகின்றனர். தமிழகத்தில் பிஜேபிக்கு நிலையான கொள்கை இல்லை. தமிழகத்தில் தேவையில்லாமல் பிஜேபி தலைவர் அண்ணாமலை பேசிவருகிறார். இது சரியல்ல . அவருக்கு நான் கடும் எச்சரிக்கை விடுகிறேன். பழைய திமுக காரன் திரும்பவந்துவிடுவான். எனவே எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.

அண்ணாவை பற்றி கிருபானந்த வாரியார் தவறாக பேசினார். அதனால் அவர் வெளியே எங்கும் சென்று பேசமுடியாத சூழல் ஏற்பட்டது. இதே நிலைமை தான் பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கும் ஏற்படும்” என தான் ஒருபொறுப்புள்ள தலைவர் என்பதை மறந்து மிரட்டல் விடுத்திருப்பது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.