அண்ணாமலைக்கு எதிராக காய் நகர்த்திய காயத்ரி… டெல்லியில் இருந்து அண்ணாமலைக்கு வந்த உத்தரவு..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நடிகையாக நடன இயக்குனராக தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட காயத்ரி ரகுராம் பெரிதாக தமிழ் சினிமாவில் சாதிக்கவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்ட பின்பு ஒரு அனுகூலச் சத்துரு போன்று தன்னால் பாஜகவின் வளர்ச்சிக்கு தடையாக பல்வேறு காலகட்டத்தில் இருந்து வந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற காயத்ரி ரகுராம் நடவடிக்கைகள், அவரின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியது,இதனால் மக்கள் கழுவி கழுவி ஊற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார் காயத்ரி ரகுராம்.அதே போன்று சில வருடங்களுக்கு முன்பு குடி போதையில் கார் ஓட்டி நள்ளிரவில் போலிசிடம் காயத்ரி ரகுராம் பிடிபட்டார். இரவு அடையாறு பகுதியில் போலிசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அதிவேகத்தில் தாறுமாறாக காரில் ரகுராம் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

வண்டியில் இருந்த காயத்ரி அளவுக்கு அதிகமாக குடித்திருந்தை கண்டறிந்த போலீசார் மது போதையைக் கண்டு பிடிக்கும் கருவியில் மூச்சுக் காற்றை ஊதும்படி போலிசார் கேட்டு கொண்டுள்ளார்கள். ஆனால் காயத்ரி அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தான் குடிக்கவில்லை என்று கூறி சோதனைக் கருவியில் ஊத மறுத்துள்ளார். ஊதவில்லை என்றால் இங்கிருந்து உங்களை அனுப்ப முடியாது என்று போலிசார் எச்சரித்துள்ளார்கள்.

வேறுவழியின்றி சோதனைக் கருவியில் காயத்ரி ஊதிய பின்பு அவர் அதிகமாகக் குடித்திருப்பதை அறிந்த போலிசார், அவரைக் கார் ஓட்டவேண்டாம் என்று கூறி, காவலர் ஒருவர் காயத்ரி ரகுராமை அவரது காரில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கொண்டுபோய் விட்டார். பின்னர் அவரது காரை போலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றார். மறுநாள் ரூ.3,500 அபராதம் செலுத்தி வண்டியை எடுத்துச் சென்றார் காயத்ரி என்கிற செய்தி தமிழகம் முழுவதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது காயத்ரி ரகுராம் பாஜக நிர்வாகி என்பதால் அந்த கட்சிக்கும் அவ பெயரை ஏற்படுத்தியது. இது போன்று காயத்ரி தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தவர், பாஜகவில் அதன் தலைவர்களுடன் இணக்கமாக வேலை செய்யாமல், கட்சி தலைவர்களுக்கு எதிராக முரண்பாடுடன் தான் செயல்பட்டு வர கூடியவர் காயத்ரி ரகுராம், அந்த வகையில் இதற்கு முன்பு பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன்.

இளைஞரணி தலைவராக இருந்த வினோஜ் பி செல்வம் மற்றும் பல பாஜக முக்கிய தலைவர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வந்துள்ளார். இது குறித்து பாஜக தலைமைக்கு பல முறை புகார் சென்றுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தாலும், காயத்ரி ரகுராம் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது பாஜக தலைமை.

சமீபத்தில் உச்ச கட்டமாக திருச்சி சூர்யா ஆடியோ விவரங்களை குறிப்பிட்டு தமிழக பாஜக கட்சிக்கும் அதன் தலைவர் அண்ணாமலைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் காயத்ரி ரகுராம். மேலும் அண்ணாமலைக்கு எதிராக மறைமுகமாக அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் அண்ணாமலைக்கு எதிராக காய் நகர்த்தி வந்தார் காயத்ரி ரகுராம்.

இது ஒட்டுமொத்த பாஜக தொண்டர்களையும் கொதிப்படையச் செய்தது பொது வெளியில் இப்படி காயத்ரி ரகுராம் செய்துவருத்தற்கு கட்சி தலைமை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற குரலும் பாஜக உள்ளே எழுந்தது. இந்நிலையில் கட்சிக்கு வளர்ச்சிக்கு அண்ணாமலைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது என்கிற டெல்லியில் இருந்து ஏற்கனவே வந்த உத்தரவை தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர்களின் ஆலோசனை கேட்ட பின்பு கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருந்த காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி பாஜக நிர்வாகிகளை மனம் குளிர வைத்துள்ளார் அண்ணாமலை என்கிறது பாஜக வட்டாரங்கள்.