ஸ்தம்பித்தது நான்கு வழி சாலை.! மதுரையில் மாபெரும் விவசாய போராட்டம்..! பஞ்சப் விவசாய போராட்டத்தை நொடிக்கு நொடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் எங்கே.?

0

மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் மிக பெரிய கண்மையாக இருக்க கூடியது நிலையூர் (கூத்தியார் குண்டு) கண்மாய். சுமார் 2000 க்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு இந்த கண்மாய் மூலமாக தான் தண்ணீர் செல்கிறது. இந்த கண்மாய் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு நிரப்பப்படும். இந்நிலையில் இந்த கண்மாயில் ஒரு பகுதியில் ( நீர்நிலை பகுதியில்) உள்ள இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்ட பட்டுள்ளது.

நிலையூர் (கூத்தியார் குண்டு )கண்மாயில் நீர் நிலை பகுதியில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என உயர்நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை சம்பந்த பட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சட்டத்துக்கு புறம்பாக புதிய கட்டிடங்களை நீர் நிலை பகுதியில் கட்ட அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சில அரசு அதிகாரிகள் துணை போவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கனமழை பெய்ந்து வருவதால் வைகை அணையில் இருந்து திறந்து விடபடும் தண்ணீரால் நிலையூர் (கூத்தியார் குண்டு) கண்மாய் நிறைந்து அடுத்தடுத்து ஊர்களில் உள்ள கண்மாய்க்கு தண்ணீர் இம்முறை சென்றுவிடும். எப்படியும் இந்த வருடம் இரண்டு போகம் விவசாயம் செய்து இருக்கிற கடன்களை கட்டிவிடலாம் என மகிச்சியில் இருந்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் நிலையூர் (கூத்தியார் குண்டு) கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து வரவேண்டிய தண்ணீர் நிறுத்தப்பட்ட தகவல் கிடைத்தது.

நீர்நிலையில் புதியதாக கட்டப்படும் கட்டிட உரிமையாளர்கள் தான் அரசு அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு கட்டிடங்களுக்கு பாதிப்பு வராமல் இருக்க சுமார் மூன்று நாட்களாக வைகை அணையில் இருந்து வரும் தண்ணீரை நிறுத்தியுள்ளார் என குற்றசாட்டு எழுந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை சுமார் 1000க்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏர்கலப்பையுடன் கூத்தியார் குண்டு விலக்கில் உள்ள நான்கு வழி சாலையை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடை பெற்று நான்கு வழி சாலை ஸ்தம்பித்தது. நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உயர்நீதி மன்ற உத்தரவின் படி அகற்ற வேண்டும் என்றும். வைகை அணையில் இருந்து நிலையூர் (கூத்தியார் குண்டு) கண்மாய்க்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் சமரசமாகவில்லை. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் வைகை அணையில் இருந்து வரும் தண்ணீர் நிலையூர் (கூத்தியார் குண்டு) கண்மாய்க்கு உடனே தண்ணீர் திறந்து விடப்படும் என்று உறுதியளித்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதும் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்.

இந்நிலையில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை நொடிக்கு நொடி நேரடி ஒளிபரப்பு செய்த சில தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு இந்த விவசாய போராட்டத்தை இருட்டடிப்பு செய்தது மட்டுமில்லாமல். தனியார் ஊடகம் ஓன்று, நிலையூர் (கூத்தியார் குண்டு) கண்மாயில் நீர்நிலையில் கட்டப்பட்ட வீடுகள் ஏரியோ, குளம் கிடையாது இது குடியிருப்பு பகுதி என செய்தி வெளியிட்டுள்ளது அந்த பகுதி விவசாயிகளுக்கு செய்தி வெளியிட்டது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீர்நிலையில் கட்டப்பட்ட கட்டிட்டங்களை அகற்ற வலியுறுத்தியும், தற்போது கட்டப்படும் கட்டிடங்களை உடனே நிறுத்த வலியுறுத்தியும், பாஜக மாநில இளைஞரணி செயலாளர் சங்கர் பாண்டி, நிலையூர்( கூத்தியார் குண்டு) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன், தற்போது உள்ள நிலையூர்( கூத்தியார் குண்டு) ஊராட்சி மன்ற தலைவர் பசும்பொன் தலைமையில் தமிழக பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி அவர்களை கூத்தியார் குண்டு மற்றும் சுற்று பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வைத்தனர்.

உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அமைச்சர் மூர்த்தி சம்பந்தபட்ட அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்டவர் உடனே மதுரை மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்தார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சம்பந்த பட்ட அதிகாரிகளை சந்தித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தபட்ட அதிகாரிகள் உறுதியளித்தனர்.