உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் போலீசாரை மிரட்டும் பெண்… வைரலான வீடியோ…

0
Follow on Google News

அத்தியாவசியத் தேவைகள் இன்றி காரில் வெளியே சுற்றிய இளம்பெண்ணின் காரை வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்யும் போது பெண்ணின் தாயார் வந்து ரகளை செய்து போலீசார் எச்சரித்து அவதூறாக பேசி உள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார்களில் வெளியில் சுற்றி வருகின்றனர்.

இதையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றி வருபவர்களின் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நினைவில் இன்று சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பெண் ஒருவர் காரை ஓட்டி வந்தார். அதை மறித்து விசாரித்தபோது அந்த பெண் எந்த ஒரு அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண் ஓட்டி வந்த காரின் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்ய முயன்றபோது அந்தப் இளம்பெண் செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் கொடுக்க, சில நொடிகளில் அந்த இடத்திற்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து அந்தப் இளம்பெண்ணின் தாயார் இறங்கி வந்த வேகத்தில் போக்குவரத்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போக்குவரத்து போலீசாரை நான் யார் என்று தெரியுமா? உன் யூனிபார்மை கழற்றி விடுவேன் என் பெண்ணுடைய காரை நீ எப்படி நிறுத்தலாம் என்றும் மிரட்டல் விடுத்து கொண்டே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

போலீசார் அந்தப் பெண்ணின் தாயாரிடம் மாஸ் அணியவில்லை என்று கூறியபோது போடா என்று சொல்லி போலீசாரை அவமதிப்பு செய்தார், மேலும் நான் ஒரு அட்வகேட் என்றும் கூறினார். போலீசார் இதை பெரிதுபடுத்தாமல் நீங்கள் மரியாதை இல்லாமல் இப்படி பேசுவது தவறு என்று கூறியும் அந்த பெண் அடங்கவில்லை வழக்கு பதிவு செய்த காரை அவர் எடுத்து சென்று விட்டார். அதனால் நடப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போலீசார் அதை தன்னுடைய மேல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். நீ பார்த்த அதிகாரிகள் உடனடியாக அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.