கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அம்புலன்ஸ்… இயக்குனர் அமீரை வசமாக சிக்க வைத்த இறைவன் உண்மையிலே மிக பெரியவன் தான்..

0
Follow on Google News

இயக்குனர் அமீரின் நெருங்கிய நண்பர் போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக், மிக பெரிய போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிக்கியதை தொடர்ந்து தற்பொழுது தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் தன்னுடைய ஆரம்ப கட்ட வாழ்க்கையில் அதாவது பல வருடங்களுக்கு முன்பு திருட்டு விசிடி விற்பனை செய்து அந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படி திருட்டு விசிடி தொழில் செய்து வந்த ஜாஃபர் சாதிக் ஒரு கட்டத்தில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் மொட்டை கார்த்திக் என்பவர் உடன் அறிமுகம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மொட்டை கார்த்திக் அறிவுறுத்தலின்படி எத்தனை நாளைக்கு இப்படி திருட்டு சிடி விற்பனை செய்து கொண்டிருப்பாய், வா போதை பொருள் கடத்தல் செய்வோம்.கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று அந்த தொழிலுக்கு ஜாபர் சாதிக்கை அழைத்து வந்துள்ளார்.

நாளடைவில் மிக பெரிய நெட் ஒர்க்கை ஏற்படுத்தி போதை பொருள் கடத்தல் தொழிலை உலக அளவில் மிக வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார் இயக்குனர் அமீரின் நண்பர் போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக். இந்த நிலையில் ஜாபர் சாதிக் பல நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். அதில் போதைப்பொருள் கடத்துவதற்கு உதவியாக இருக்கும் வகையில் சில நிறுவனங்களை பய்னபடுத்தியுள்ளார்.

அதில் முக்கியமாக கொரியர் சர்வீஸ் மற்றும் அம்புலன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி போதை பொருளை கடத்தி வந்துள்ளார் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் என கூறப்படுகிறது. டன் கணக்கில் வரும் போதை பொருளை, கிராம் கணக்கில் பிரித்து அதை கொரியர் சர்விஸ் மூலம் மிக சாதுர்யமாக போதை பொருட்களை கடத்தி வந்துள்ளார் இயக்குனர் அமீரின் நண்பர் ஜாபர் சாதிக் என கூறப்படுகிறது.

மேலும், ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து போதை பொருள் கடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது அதாவது சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பணத்தை கொடுத்து அந்த ஆம்புலன்ஸ் மூலம் போதை பொருள் கடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது போன்ற சில அதிர்ச்சீட்டும் தகவல் வெளிவந்து வருவதால் இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இப்படி மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் மன்னனாக இருந்த ஜாபர் சாதிக் எதுவுமே தெரியாதது போன்ற ஒரு அப்பாவியாக, அதாவது இந்த பூனையும் பால் குடிக்குமா என்று சொல்லும் வகையில் சினிமா தயாரிப்பாளராகவும் ஒரு அரசியல் பிரமுகராகவும் வலம் வந்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அந்த வகையில் மும்பையில் எப்படி தாவூத் இப்ராஹிம் மிகப்பெரிய கடத்தல் மன்னனாக செயல்பட்டாரோ அதோ போன்று ஜாபர் சாதிக் மிகப்பெரிய கடத்தல் மன்னனாக செயல்பட்டு வந்துள்ளது தற்பொழுது வரும் தகவல் உறுதி படுத்தி வருகிறது.

இந்நிலையில் போதை பொருள் கடத்தலில் வரும் பணத்தில் இறைவன் மிகப்பெரியவன் என்று படம் எடுத்த இயக்கிய அமீர் மற்றும் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் இருவருக்கும் சரியான தண்டனையை அவர்கள் பின்பற்றக்கூடிய இறைவன் கொடுத்துவிட்டார் அந்த வகையில் ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமீர் இனி எனக்கு எதுவுமே தெரியாது என்று ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.