ஓட்டலில் குத்தாட்டத்தில் மிதப்பு… வெளியானது துபாயில் காயத்ரி ரகுராம் ரகசிய சந்திப்பு… யாருடன் தெரியுமா.? 

0
Follow on Google News

தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தற்பொழுது பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக காயத்ரி ரகுராம் துபாயில் ரகசியமாக சிலரை சந்தித்தார் என்கிற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, துபாயில் காயத்ரி என்ன செய்தார், யாரை சந்தித்தார் என்கிற மர்மம் நீடித்து வந்த நிலையில் அதற்கான முழு விவரம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துபாயில்  IPF தமிழ்நாடு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகின்றவர்  K. ரவிச்சந்திரன். தமிழகத்தை சேர்ந்த இவர் கடந்த 16.10.2022 அன்று துபாய் பாஜக IPF  கவுன்சிலிங் ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக வெளிநாடு வாழ் தமிழர் நலன் மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் பதவி ஏற்கும் நாளுக்கு முன்கூட்டியே 11-10-2022 தேதி அன்று காயத்ரி ரகுராம் துபாய் வந்துள்ளார்.

காயத்ரியை தொடர்பு கொண்டு ரவிச்சந்திரன். கேட்ட பொழுது, PERSONAL வேலையாக வந்துள்ளேன், 
நண்பர் ROOMஇல் தங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் சசிகுமார் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகிய பாஜக நிர்வாகி இருவரும் காயத்ரி ரகுராம் உடன் துபாய் சென்றுள்ளார்கள். துபாய் வந்த அடுத்த நாள் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு 8 நாட்கள் தங்க இருக்கும் ஓட்டல் பில் சுமார் 2,75,000 ரூபாய் கட்ட வலியுறுத்தியுள்ளது காயத்ரி ரகுராம் தரப்பினர். ஆனால் அதற்கு ரவிச்சந்திரன் மறுத்துள்ளார்.

.உடனே கோபப்பட்ட காயத்ரி ரகுராம் அசிங்கமான வார்த்தைகளால் 50 வயது ரவிச்சந்திரனை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் துபாயில் உள்ள திமுக நிர்வாகி ஒருவரை வரவழைத்த காயத்ரி ரகுராம்,  துபாயின் IPF ன் ஒருங்கிணைப்பாளர் பதவியை வேறு ஒருவர் எடுத்து கொள்ள வற்புறுத்தியுள்ளார், ஆனால் வேறு யாரும் முன் வரவில்லை. இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட சென்றுள்ளார் காயத்ரி ரகுராம். 

அப்போது  இந்த இடம்ஆடம்பரமாக இல்லை, எனது பெயருக்கு இது கலங்கம் விளைவிக்கும் செயல் இது அண்ணாமலை வந்தால் இப்படித்தான் செய்வாயா? ஆடம்பரமாக அவருக்கு மட்டும் தான் செய்வீர்களா? எங்களுக்கெல்லாம் செய்ய மாட்டியா.? ரவிச்சந்திரனிடம் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் காயத்ரி ரகுராம். இதன் பின்பு ஆடம்பரமான வேறு ஒரு இடம்  புக் செய்து காயத்ரியை திருப்திப்படுத்தியுள்ளார் ரவிச்சந்திரன்.

ஆனால் 16-10-2022 அன்று நடந்த நிகழ்ச்சியில் தன்னை பற்றி மட்டும் பெருமையாக பேசிவிட்டு. அவசரமாக வேறு ஒரு ரகசியமான நிகழ்ச்சிக்கு சென்று விட்டார் காயத்ரி ரகுராம். அவர் கலந்து கொண்ட ரகசிய நிகழ்ச்சி குறித்த தகவல் ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அழைக்கப்பட்டு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் கேளிக்கை , கொண்டாட்டங்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் சந்திப்பு இவைகளில் மட்டுமே துபாயில் கவனம் செலுத்தி வந்துள்ளார் காயத்ரி ரகுராம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து காயத்ரி ரகுராம் இருவரும் துபாயில் குத்தாட்டத்தில் மிதந்துள்ளார்கள். இந்நிலையில் காயத்ரி ரகுராம் துபாய் சென்று திருப்பியது வரை, அவரின் நடவடிக்கைகள் அனைத்தையும் புகாராக துபாயில் வசிக்கும் ரவிச்சந்திரன் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரிவித்தவர், காயத்ரி ரகுராம் போன்ற திமுக கைக்கூலிகளை உடனடியாக களை எடுத்து, மேலும் அநாகரிகமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் அடங்காபிடாரி, பெண் குலத்திற்கே கேடு விளைவிக்கும் காயத்ரி ரகுராம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துபாயில் இருந்து அண்ணாமலைக்கு அனுப்பிய புகார் கடிதத்தில் ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கொத்தடிமைகளே… உங்களை போட்டு பொழக்க போகிறேன்… அண்ணாமலை பேச்சு..