ரோஹித் சர்மாவுக்கு ஆப்பு…. தேம்பி தேம்பி அழுத இந்திய வீரர்கள்…. தேடி சென்று ஆறுதல் சொன்ன மோடி…

0
Follow on Google News

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இந்த தொடரில் லீக் சுற்று, அரையிறுதி சுற்று என அதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தயுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு பிரதமர் மோடி வெற்றி கோப்பையை பரிசளித்து விட்டு, சட்டென மேடையில் இருந்து மோடி கிளம்பியது, பலரும் பலவகையில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மேடைக்கு வரும் வரை பிரதமர் மோடி மேடையில் நிற்கவில்லையே. ஆஸ்திரேலிய வீரர்களுடனுடன் இணைந்து போஸ் கொடுக்கவில்லையே என சிலர் கருத்து தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.

ஆனால் மேடையில் இருந்து கீழே சென்ற பிரதமர் மோடி ஆஸ்திரேலியா வீரர்களிடம் கைகொடுத்ததும் குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் இந்திய அணியினரின் ஓய்வறைக்கு சென்ற பிரதமர் மோடி, கதறி அழுது கொண்டு இருந்த ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா என்று ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டி தனது ஆறுதலை கூறினார்.

அங்கே இருந்த பந்து வீச்சாளர் ஷமியை பிரதமர் மோடி கட்டி அணைத்து, அவரது முதுகில் தட்டிக் கொடுத்தார். உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம் என்று பிரதமர் ஆறுதல் தெரிவித்தார்.

இருந்தும் தவறு செய்து விட்டோம், ஒழுங்காக விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் என்கிற ஒரு குற்ற உணர்வுடன் மிகவும் சோகத்துடன் ட்ரெஸிங் ரூமில் இந்திய வீரர்கள் பிரதமர் மோடி முன்பு இருப்பது போன்று இருந்தது, அங்கே இருந்தார் வீரர்களின் சோகம். இந்நிலையில் இந்தியா உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைய முக்கிய காரணமாக இருந்தது கேப்டன் ரோஹித் சர்மா தான் என கடும் விமர்சனம் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில்,

ரோஹித் ஷர்மாவுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. உலக கோப்பை போட்டிக்கு பின்னர் இந்திய ஒருநாள் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க இந்திய கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கார் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி உலக கோப்பையில் விக்கெட் கீப்பராக, சிறந்த பேட்ஸ்மேனாக சிறப்பாக செயற்பட்ட கே.எல். ராகுலை அணித்தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மைதானத்தில் ஸ்பின் பவுலர்களிடம் கலந்து பேசி, அவர்களை சிறப்பாக கே.எல். ராகுல் வழிநடத்தியது பலருடைய கவனத்தை ஈர்த்தது, கே.எல். ராகுலின் செயலை பார்த்தும் பலரும் ரோஹித் சர்மாவுக்கு பதில் கே.எல். ராகுலை கேப்டனாக நியமிக்கலாம் என கருத்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், அடுத்த இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலை நியமிக்க வாய்ப்புள்ளது குறிப்பித்தக்கது.