ஆயிரம் கோலி, டோனி வந்தாலும் அருகில் நெருங்கமுடியாத உயரத்தில் சச்சின்.!

0
Follow on Google News

மிக நிதானமும், ஒரு வித மதிநுட்பமும் கொண்ட கிரிக்கெட் விளையாட்டில் மகா முக்க்கியமானவர் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவால் திரும்பி பார்க்க வைத்த இந்திய கிரிக்கெட் அணியினை அப்படியே நிறுத்தி கவனத்தை தக்க வைத்தவர் சச்சின், உலக அளவில் இந்திய கிரிக்கெட்டின் மிக பெரும் அடையாளமாகி, கிரிக்கெட் மேதை பிராட்மேனின் வாரிசாகவே அறியபட்ட சச்சினால் வளர்ந்த தலைமுறை அவரை மறக்க முடியாது.

நவம்பர் 15,1989 இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 16 வயதில் இந்திய அணிக்காக தனது இன்னிங்ஸை விளையாட களமிறங்கினர் சச்சின். இந்த இளைஞன் பின்னாளில் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகளை குவிப்பான் என அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் போட்டி 24 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கிறான். அந்த இளைஞன்தான் சச்சின் டெண்டுல்கர்.

ஆயிரம் கோலி, டோனி வந்தாலும் சச்சின் தொட்டு அமர்ந்த அந்த உயரத்தை இனி ஒருவரால் தொடமுடியுமா,? என்பது பெரும் கேள்வி குறி, அற்புதமான ஆட்டக்காரர். அவரின் ஷாட்கள் சில மகா அற்புதமானவை, அவரால் அன்றி யாராலும் ஆடமுடியா ஆட்டங்கள் அவை என வர்ணிக்கப்பட்ட ஆட்டங்கள் அவை. இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் சச்சின் சாதனைகள் இனிவரும் கிரிக்கெட் வீரர்களுக்கு உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பல்கலைக்கழகம்.

வலது கை ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 18,466 ரன்கள் குவித்தது தனி சாதனை. கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே வீரர் சச்சின்தான். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 30,000 ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் சச்சினையே சேரும். முதன் முதலில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் குவித்ததும் சச்சின் டெண்டுல்கர்தான். இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் கவுரவமும் அடையாளமுமான கிரிக்கெட் மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.