எனது கடைசிப் போட்டி சென்னையில்தான்… ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தோனி!

0
Follow on Google News

சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி தனது கடைசிப் போட்டி குறித்து பேசியுள்ளார். ஐபிஎல் தொடரின் வலுவான அணிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை நான்கு முறை அந்த அணி கோப்பையை வென்றுள்ளது. கடந்த ஆண்டு மோசமாக லீக் போட்டிகளோடு வெளியேறிய அணி இந்த ஆண்டு பலமாக மீண்டு வந்து கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது.

ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடந்ததால் தமிழக ரசிகர்களால் வெற்றியை முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய தோனி ’எனது கடைசிப் போட்டி சென்னை மைதானத்தில்தான் நடக்கும் எனக் கூறியுள்ளார். அது அடுத்த ஆண்டு நடந்தாலும் ஐந்து ஆண்டுகள் கழித்து நடந்தாலும் சரி. சென்னை ரசிகர்கள் கிரிக்கெட் பற்றிய சிறப்பான புரிதல் கொண்டவர்கள்’ எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!