எல்லாம் பிறப்பு, வளர்ப்பு, இரத்தம்,…அந்த மரபணுதான்.! அக்கினிக்கும்பம் விவகாரம்… சாதி வெறியர்களுக்கு கவிஞர் தாமரை பதிலடி…

0
Follow on Google News

ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற அக்கினிக்கும்பம் காலண்டர் விவகாரம் ஒரு பிரிவினர் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர் அதில். பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை வெளியிட்டிருந்த அறிக்கையில். அக்கினிக்கும்பம் வன்னிய சமூகத்தினருக்கான குறியீடு என்று எனக்கு இன்றுதான் தெரியும் . என்றும் மேலும் ஒரு கலைஞரை வன்மையாக எதிர்க்குமுன் அவரது பண்புத்தடத்தை (reputation) ஆராய்ந்து பார்த்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்,

சாதி, சாதிப் பிரிவினைகள், சாதியாக ஒன்று சேர்வது, சாதிப் பெருமையைத் தூக்கிப் பிடிப்பது போன்ற தமிழகத்தின் தீராத சாபக்கேடுகள் தொடர்பாகத் தனியாகப் பேச வேண்டும் என சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு குறிப்பிட்ட ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், அதில் ஒருவர் கவிஞர் தாமரை ஆபாசமாக அவர் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவாக விமர்சனம் செய்து கவிஞர் தாமரை முகநூல் பக்கத்தில் பதில் அளித்திருந்தார்.

இதுகுறித்து கவிஞர் தாமரை தெரிவித்ததாவது. சாதி வெறியர்கள் ! ஜெய்பீம் திரைப்படத்தினால் தமிழ்ச்சமூகத்தில் ஓர் உரத்த உரையாடல் நிகழ்ந்திருக்கிறது. முற்போக்காளர்கள் ஒருபுறமிருக்க, சாதி வெறியர்கள் வேகமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். படத்தின் அடிநாதமான – எளிய மக்களுக்கெதிரான அடக்குமுறை, நீதிக்கான போராட்டம் – இவற்றை விட்டுவிட்டு சாதிப்பற்று, சாதிச்சண்டையே முன்னுக்கு நிற்கிறது.

என் கருத்தாக நான் வெளியிட்டிருந்த முகநூல் பதிவில், படத்துக்கு ஆதரவாகக் கருத்திட்டிருந்தேனாம், அதனால் ‘புண்பட்ட’ சில உள்ளங்கள் வசவுகளை வாரித் தெளித்து வந்தனர். வாரித் தெளித்ததன் மூலம் தங்களைத் தாங்களே அடையாளம் காட்டிக் கொள்கின்றனர் என்று சிரித்துக் கொண்டேன். இதோ இங்கே உதாரணத்திற்கு ஒரு தம்பியின் பின்னூட்டத்தைத் தருகிறேன். எத்தனை படித்தால் என்ன, எந்தச் சீமையில் வேலை பார்த்தால் என்ன, நாகரீகம் நயம் என்பதெல்லாம் தேவையே இல்லை போல !.

சாதிக்கு நேர் எதிரியான என்னையே, ‘ஒருவேளை படிப்பெல்லாம் ஒன்றுக்கும் உதவாது போல, எல்லாம் பிறப்பு, வளர்ப்பு, இரத்தம், அந்த …அதென்ன…ஆங்…அந்த மரபணுதான் எல்லாம் போல’ என்று எண்ண வைத்து விட்டது . தம்பியார் ‘பொறியியல்’ படித்து விட்டு ‘சிங்கப்பூர்ச் சீமையில்’ பணியாற்றுகிறாராம்… இவருடன் பணியாற்றும் பெண்கள், பழகும் பெண்கள் கதியென்னவோ ! எதற்கும் இந்தத் தம்பியிடம் எச்சரிக்கையாக இருங்கள் – இவர் சாதியில் பிறக்காத இன்ன பிற சாதியினரே !

அன்றைய என் பதிவுக்குப் பிறகு சாதி பற்றி ஒரு பதிவு எழுதுவது கட்டாயமாகத் தோன்றவே எழுத ஆரம்பித்தேன். எனக்கிருக்கும் வேலைச்சுமைக்கிடையில், விரிவாக எழுத வேண்டிய ஒரு தலைப்பை, போகிற போக்கில், மேலோட்டமாக எழுத முடியாதே என்று நிறுத்தி வைத்திருந்தேன். இருந்தாலும் சிறிய அளவிலாவது அதைப் பதிவிட்டு விட வேண்டும் என்று நினைக்கிறேன்.

சாதிகள் அற்ற சமநிலைச் சமுதாயமே என் கனவு !. சாதிக்கு எதிராக நிற்கிறேன் ; மதங்களுக்கு எதிராக நிற்கிறேன். இனியும் என் நிலைப்பாடு அதுதான் ! என்னை எத்தனை ஆபாசமாக தாக்கினாலும் அச்சுறுத்தினாலும் என் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள மாட்டேன். ‘தமிழ் மரபு’ எனக்குக் கற்றுக் கொடுத்த அறத்தின் வழி நிற்பேன்.

எதற்கெடுத்தாலும் ‘தியாகு’வை இழுத்து, என்னை அசிங்கப் படுத்துகிறார்களாம். ஹைய்யோ ஹைய்யோ… இதையெல்லாம் தாண்டிதான், நான் வெற்றியுடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இனியும் அப்படித்தான்.. சாதிப்பற்றாளர்கள் என் நட்பிலிருந்து விலகிக் கொள்ளலாம் என கவிஞர் தாமரை தன்னை பற்றி ஆபாசமாக பதிவு செய்த்தவருக்கு பதில் அளித்துள்ளார்.