ஹர்திக் பாண்டியாவை கழட்டிவிட்ட அம்பானி…மும்பை அணியின் கேப்டனாகும் ரோஹித் சர்மா…

0
Follow on Google News

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்கில் அபாரமாக விளையாடி வருகின்றன. இருப்பினும் இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏராளமான பிரச்சனைகளும் சர்ச்சைகளும் தொடங்கி விட்டன.

மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில் வெடித்த பிரச்சனை இன்னும் முற்றுப்பெறாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் நடப்பு சீசனில் ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ரோகித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார்.

ஆனால் கடந்த மூன்று வருடங்களாக மும்பை அணி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. இதனால் அப்செட் ஆன மும்பை அணி நிர்வாகம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனை மாற்ற முடிவு செய்தது. இந்த ஆண்டு எப்படியாவது ஐபிஎல் கோப்பையை வென்று விட வேண்டும் என்ற நோக்கில் மும்பை அணிக்கு சிறந்த கேப்டனை நியமிக்க வேண்டும் என்று நிர்வாகம் திட்டமிட்டு வந்தது .

அதன்படி, குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு புதிய கேப்டனாக நியமித்தது. ஐபிஎல் கோப்பையை இந்த முறை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் கேப்டனை மாற்றிய மும்பை அணி நிர்வாகத்திற்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆம், குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும்போது அபாரமாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்கு வந்ததிலிருந்து பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே சொதப்பி வருகிறார்.

அது மட்டுமில்லாமல் டீம் செலக்சன், எந்த ஓவர்களில் எந்த பவுலர்களை பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு, கச்சிதமாக பீல்டிங் நிறுத்துவது மற்றும் கடைசி ஓவர்களில் எதிரணியை ரன் எடுக்க விடாமல் திணறடிப்பது என பலவற்றிலும் சரியான கேப்டனாக அவர் செயல்படவில்லை. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி மிகவும் தடுமாறி வருகிறது .

குறிப்பாக, 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மும்பை அணிக்கு இன்னும் ஐந்து லீக் போட்டிகள் உள்ளன. இந்த ஐந்து போட்டிகளிலும் வென்றால் கூட மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது என்பது கஷ்டம் தான். நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறும் நிலையில் உள்ளது.

எனவே மும்பை அணி நிர்வாகம் 2025 ஐபிஎல் தொடருக்கு திட்டமிட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. நடப்பு சீசனில் ஹர்திக் பாண்டியா படுமோசமாக விளையாடி இருப்பதால், அவரை அடுத்த சீசனிலும் கேப்டன் ஆக நியமிப்பது சரியான முடிவாக இருக்குமா? மீண்டும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக நியமிக்கலாமா என்ற முடிவை மும்பை நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

ரோகித் சர்மா இந்திய டி20 அணியில் கேப்டனாக செயல்பட இருக்கும் நிலையில் அவரை இன்னும் ஓராண்டுக்கு கேப்டனாக நியமிக்கலாம். அந்த வகையில், ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாக நியமிக்க முடிவு செய்தால், இப்போதே ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மா தலைமையில் அடுத்த ஐந்து போட்டிகளை மும்பை அணி சந்திக்கலாமா என்கிற ஆலோசனையில் மும்பை நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.