முதல் ஆஷஸ் டெஸ்ட்… ஆஸி இமாலய வெற்றி!

0

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் 100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டிசம்பர் 8 ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

பேட் செய்ய இறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்குதலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சுருண்டது. ஆஸி அணியின் புது கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். அதன் பின்னர் ஆடிய ஆஸி அணி டிராவிஸ் ஹெட்டின் அபாரமான சதத்தால் 425 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி அணிக்கு 20 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸி அணி ஒரு விக்கெட் இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.