திருப்பரங்குன்றம் வரும் யோகி ஆதித்யநாத்… அமித்சாவிடம் போடும் வியூகம்… பரபரக்கும் திருப்பரங்குன்றம் விவகாரம்…

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என ஒவ்வொரு வருடம் கார்த்திகை தீப திருநாளில், இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் மலை மீது ஏறி தீபம் ஏற்ற முயற்சி செய்வதும், அவர்களை காவல்த்துறை தடுத்து கைது செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கார்த்திகை தீப தூண் விவகாரம் நீதிமன்றம் வரை சென்று , இந்த வருடம் கார்த்திகை தீப திருநாளில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

சுமார் நூறாண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மகிழ்ச்சியுடன் முருக பக்தர்கள் கார்த்திகை தீப திருநாள் அன்று, மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணை நோக்கி தீபம் ஏற்றப்படுவதை பார்க்க மிக அவளோடு இருந்தனர், மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தற்பொழுது இந்தியா முழுவதும் மிக பெரிய விவாத பொருளாக மாறி இருக்கிறது.

இந்நிலையில் விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், திருப்பரங்குன்றம் விவகாரம் அரசியல் ரீதியாக மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டியை இழிவு படுத்தியதை தொடர்ந்து, அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த எல் முருகன் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டார், இது மக்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பலனாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது.

இந்நிலையில் தற்பொழுது திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரமும் மக்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசியது இந்தியா முழுவதும் கவனத்தை பெற்று இருந்தது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரடியாக திருப்பரங்குன்றம் வந்து கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சித்து கைது செய்யப்பட்டது அரசியல் ரீதியாக பாஜகவுக்கு சாதகமாக மாறியுள்ளது.

இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலுக்கும் இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், ஒவ்வொரு மாதமும் தேசிய அளவில் இருக்கும் ஒரு தலைவர் தமிழகம் வர இருக்கிறார்கள், அதற்கான வியூகத்தை அமிட்ஷா வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் தேர்தலில் திருப்பரங்குன்றம் விவகாரம் மிக பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பேசும் வகையில் இருப்பதற்கான வேலையை பாஜக தீவிர படுத்தி வருகிறது.

குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக , வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு இடையில் தேசியல் அளவில் உள்ள பாஜக முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வர இருக்கும் நிலையில் , உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், திருப்பரங்குன்றம் வந்து திருப்பரங்குன்றம் முருகனை தரிசனம் செய்து விட்டு, மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபட வைக்கலாம் என தீவிர ஆலோசனையில் டெல்லி பாஜக தலைமை ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்ற போது, யோகி ஆதித்யநாத் திருப்பரங்குன்றம் வருவது குறித்து அவரிடம் டெல்லி தலைமை ஆலோசனை நடத்தியதாகவும் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் சிறப்பு குறித்து நயினார் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.