சமிபதியில் முதல்வர் விஜய் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்பு துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு குறித்தும் மற்றும் கடந்த 4 மாதம் தவெக ஆட்சி குறித்தும், கடந்து திமுக ஆட்சியில் அரங்கேறிய ஊழல் வழக்குகள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார், இதில் தமிழக்தில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எந்த விதத்திலும் கம்பரமேசன் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.
மக்கள் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் சட்டம் அதன் கடமை செய்யவேண்டும் என பேசி இருக்கிறார் முதல்வர் விஜய், மேலும் கடந்த திமுக ஆட்சியில் அரங்கேறி ஊழல் வழக்கு குறித்து கேட்டிருக்கிறார் விஜய், அதில் குறிப்பாக தவெக ஆட்சிக்கு வந்த ஏ வே வேலு மற்றும் கே என் நேரு ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து தற்பொழுது எந்த கட்டத்தில் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து இருக்கிறார் முதல்வர் விஜய்.

அடுத்ததாக திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு துறை வழக்குகளில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மேலும் சாட்சியங்கள் கொடுத்த வாக்குமூலம், அதனை தொடர்ந்து எடுத்து நடவடிக்கைகள் என்ன என்பதை பொறுமையாக விவரமாக கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய், அடுத்ததாக முன்னாள் அன்பின் மகேஷ் பொய்யா மொழி விவகாரம் குறித்து பேசி இருக்கிறார் விஜய்.
கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறையில் நடந்த 100 கோடி ஊழலில் சிக்கி சிறையில் இருக்கும் பி டி அரசகுமார் மீது இருக்கும் குண்டர் சட்டம் ஏன் ரத்து செய்யப்பட்டது, அரசு தரப்பு வழங்கறிஞர்கள் என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் சற்று காரராகவே முதல்வர் விஜய் அந்த ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்து அன்பில் மகேஷ் சொந்தமான இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து கேட்டு இருக்கிறார் விஜய்.
அன்பில் மகேஷ் விவகாரத்தில் பி டி அரசகுமாரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது போன்று ஏன் அன்பில் மகேசிடன் அதிரடி காட்ட வில்லை, பி டி அரசகுமார் ஒரு ஏஜென்ட் போல தான் செய்லபட்டு இருக்கிறார், அவர் யாருக்கு வசூல் செய்து கொடுத்தார், அந்த பணம் எங்கெல்லாம் சென்று இருக்கிறது என்பதை விசாரணையை தீவிரப்படுத்தி, இந்த விவகாரத்தில் ஒருவரும் தப்பிக்க கூடாது என உத்தரவிட்ட விஜய்.
ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்த விதத்திலும் தப்பிக்க விட்டு விடக்கூடாது, தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் எனக்கு திருப்தி இல்லை என பேசிய விஜய், ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் ஒரு திமுக முன்னாள் அமைச்சரை கூட கைது செய்ய முடியவில்லை என்றால் மக்களுக்கு நம் மீது எப்படி நம்பிக்கை வரும், அடுத்தடுத்து கைதுக்கான வேலையை தொடங்குக என்றும் உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர் விஜய் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையில் நடந்து முடிந்த இடைதேர்தலில் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்து கேட்டு இருக்கிறார் முதல்வர் விஜய், அப்போது தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்து விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் அதிகாரிகள்.
அடுத்ததாக ஒரு அதிகாரி சீமான் குறித்து பேச்சை எடுத்து இருக்கிறார், அதாவது சீமான் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி இருக்கிறார், அதை வைத்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என பேசு, please அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம், அவரையெல்லாம் இக்னோர் பண்ணுக சார் என ரெம்ப கேசுவலாக பேசி இருக்கிறார் முதல்வர் விஜய் என கூறப்படுகிறது.

