தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி, வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என இவர்களின் விசுவாசம் திமுகவுக்கு தான் என்பது முதல்வராக பொறுப்பேற்ற சில நாட்களிலே முதல்வர் விஜய் புரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் நீண்ட காலமாக திமுகவுடன் பயணித்து கூட்டணி கட்சிகள், நம்முடன் இணக்கமாக சில நாட்கள் ஆகலாம் , என பொறுமையாக கம்யூனிஸ்ட் மற்றும் விசிக நடவடிக்கைகளை மிக தீவிரமாக கண்காணித்து வந்து இருக்கிறார் முதல்வர் விஜய், ஆனாலும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளிடமும் எந்த மாற்றமும் இல்லை, சில விசயங்களை திமுகவிடம் இருந்து வரும் உத்தரவு படி செயல்படுவதும் முதல்வர் விஜய் கவந்துக்கு சென்று இருக்கிறது.

இந்நிலையில் கடைசியாக நடந்த சட்டசபை கூட்ட தொடரில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த அமைச்சர் வன்னியரசு, சட்டசபையில் உதயநிதி ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டியதை முதலவர் விஜய் ரசிக்கவில்லை என்றாலும் கூட , விசிக மீது ஒரு அதிருப்தி உருவாக தொடக்க காரணமாக வன்னியரசு சட்டசபையில் உதயநிதிக்கு புகழாரம் சூட்டிய விவகாரம் அமைந்து விட்டது என கூறப்படுகிறது.
இந்நிலையில் தாராபுரம் – மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி இடைதேர்தலிலும் தவெக வெற்றி பெற கூடாது என்பதே விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நோக்கம் என்றும், தவெக அடுத்தடுத்து நடக்கும் இடைதேர்தலில் வெற்றி பெற்று விட்டால், தனி மெஜாரிட்டி உடன் ஆட்சியை நடத்த தொடங்கி விடுவார்கள், அதன் பின்பு கூட்டணி கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க மாட்டார்கள் என்பது விசிக மற்றும் கம்யூனிட்ஸ்ட் கட்சிகளின் பார்வையாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனாலே தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நடந்த இடைதேர்தலில் கம்யுன்சிட் கட்சி தனித்த வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கிறது, இதில் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைதேர்தல் பிரச்சாரத்தில் திமுக – அதிமுகவை அதிகம் விமர்சனம் செய்யாமல், தொடர்ந்து தவெகவை மட்டுமே விமர்சனம் செய்து வந்ததின் நோக்கம் இடைதேர்தலில் தவெக வை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்கிற நோக்கம் தான் என்பது வெட்ட வெளிச்சமானது.
மேலும் இடைதேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து வேட்பாளரை களம் இறங்க முடிவு செய்த பொது திருமாவளவன் நினைத்து இருந்தால் தடுத்து நிறுத்தி இருக்கலாம், ஆனால் அதற்கான முயற்சியை அவர் எடுக்க வில்லை என்பதும் முதல்வர் விஜய்யை அப்செட்டாகி இருக்கிறது, இந்நிலையில் முதல்வர் விஜய்க்கு சமீபத்தில் உளவு துறை ரிப்போர்ட் ஒன்று சென்று இருக்கிறது.
அதில் இரண்டு கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய இரண்டு கட்சிகளும் தவெக ஆட்சியில் இருப்பதை விரும்ப வில்லை,மேலும் அடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு தவெக ஆட்சியை கவிழ்க்கும் திட்டமும் ரகசியமாக நடந்து வருகிறது. தவெக ஆட்சியின் மீது இருக்கும் அதிருப்தியில் வெளிப்பாடு தான், எஸ்ஐஆர் மூலம் தான் தவெக வென்று இருக்க வாய்ப்பு என்று திருமாவளவன் பேசியது என விஜய்க்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறது.
சமீபத்தில் விஜய்க்கு சென்ற ரிப்போர்ட்டை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி இருக்கிறாராம் முதல்வர் விஜய், குறிப்பாக இடைதேர்தல் முடிவுகள் வெளியான பின்பு அந்த இரண்டு தொகுதியிலும் தவெக வெற்றி பெற்று விட்டால் , மேலும் பாமகவை உள்ளே கொண்டு வந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவும் வேண்டாம், விசிக ஆதரவும் வேண்டாம் என்கிற முடிவுக்கு விஜய் வந்து விட்டதாக கூறப்படுகிறது.

