இந்தியாவிலே முன்னணி மாநிலம் தமிழ்நாடு… தொலைநோக்குடன் செயல்படும் CTR … தமிழ்நாட்டில் இனி No Power Cut ….

0
Follow on Google News

கடந்த திமுக ஆட்சியில் மின்சார துறையில் தொலைநோக்கு திட்டத்துடன் ஆக்கப்பூர்வமாக செயல்படாத காரணத்தினால், தற்பொழுது தவெக ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடுகிறது என்கிறரர்கள் பெறியியல் வல்லுநர்கள், இந்நிலையில் தற்பொழுது கடந்த திமுக ஆட்சியில் செய்யாமல் விட்ட சீர்திருத்த பணிகளை மேற்கொண்டு, தமிழக மக்களுக்கு தடையின்றி மிசாரம் கிடைக்க தொலைநோக்கு பார்வையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் எரிசக்தி துறை அமைச்சர் CTR நிர்மல் குமார், எதிர்காலதில் பசுமை எரிசக்தித் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளுக்கு அடித்தளமிடும் வகையில் சமீபத்தில் “Indo-Danish Wind Forum” நிகழ்வில் கலந்து கொண்டார்.

எரிசக்தி துறை அமைச்சர் CTR நிர்மல் குமார் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், இந்தியா–டென்மார்க் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் காற்றாலை மின்சாரம், கடல்சார் காற்றாலை மின்சாரம் மற்றும் பசுமை எரிசக்தி துறைகளில் அடுத்தகட்ட வளர்ச்சியை எப்படி கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது, குறிப்பாக இந்த நிகழ்வு என்பது தமிழ்நாட்டிற்கு கிடைக்க போகும் மிக பெரிய பலன்களின் ஒன்றாக பார்க்க படுகிறது.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட குறைந்த திறன் கொண்ட காற்றாலைகள் தற்போதைய கால சூழலுக்கு ஏற்றார் போல் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் இல்லை, இந்நிலையில் தற்பொழுது அந்த காற்றாலை பகுதிகளிலேயே நவீன தொழில்நுட்பத்துடன் அதிக திறன் கொண்ட புதிய காற்றாலைகளை அமைப்பதற்கான வேலையில் அமைச்சர் CTR நிர்மல் குமார் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு எரிசக்தி துறை இறங்கி இருக்கிறது.இதனால் தமிழகத்தில் அதிகம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்,

அடுத்தபடியாக அமைச்சர் CTR பங்கேற்ற “Indo-Danish Wind Forum” மூலமாக தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரையும், கடலோரப் பகுதிகளில் கிடைக்கும் வலுவான காற்றாலை வளத்தை பயன்படுத்தி Offshore Wind Energy எனப்படும் கடல்சார் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த துறையில் டென்மார்க்கிடம் பல ஆண்டுகளாக தொழில்நுட்ப அனுபவம் உள்ளது.

அந்த வகையில் டென்மார்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும் இணைத்தால், தமிழ்நாடு இந்தியாவின் மிகப்பெரிய offshore wind energy மையங்களில் ஒன்றாக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மின்சாரம் மட்டுமல்ல, அமைச்சர் CTR ன் இந்த முயற்சியால் மிகப்பெரிய முதலீடுகளும் வருவதற்கான வாய்ப்பு உருவாகும்

இதைவிட முக்கியமானது Green ஹைட்ரஜன் என சொல்ல கூடிய காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் மூலம் கிடைக்கும் பசுமை மின்சாரத்தை பயன்படுத்தி Green Hydrogen தயாரிக்க முடியும். எதிர்காலத்தில் தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல துறைகளில் Green Hydrogen-க்கு தேவை அதிகரிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் காற்றாலை மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட Green Hydrogen தொழில்துறையும் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

எனவே தமிழ்நாடு எரிசக்தி அமைச்சர் CTR நிர்மல் குமார் பங்கேற்ற இந்தோ–டேனிஷ் விண்ட் ஃபோரம் என்பது வெறும் ஒரு தொழில்துறை மாநாடு கிடையாது. தமிழ்நாட்டின் காற்றாலை வளத்தை முழுமையாக பயன்படுத்தி, புதிய முதலீடுகளை ஈர்த்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, Offshore Wind மற்றும் Green Hydrogen போன்ற எதிர்கால தொழில்களை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முக்கியமான ஒரு முயற்சியாக அமைச்சர் CTR நிர்மல் குமார் நடவடிக்கைகள் பார்க்க படுகிறது.

மேலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி Green Energy Manufacturing மற்றும் Offshore Wind Hub-ஆக மாற்றுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு தற்போது அமைச்சர் CTR நிர்மல் குமார் மூலமாக உருவாகியுள்ளது.