தவெகவில் இணையும் 5 திமுக எம் எல் ஏ… திறந்தது பனையூர் கேட்… கடும் அப்செட்டில் முக ஸ்டாலின்…

0
Follow on Google News

நடந்து முடிந்துள்ள மதுராந்தகம் , தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தமிழக அரசியலில் யூகிக்கவே முடியாத பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேற இருக்கிறது. நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு ஒரு தரப்பினர் தவெக அரசுக்கு ஆதரவை வழங்கியவர்கள், அதில் சுமார் 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்தனர்.

அதிமுகவில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களாக ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்தாலும் கூட திமுகவில் இருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட விலகி தவெக வில் இணைய வில்லை என திமுக தரப்பில் மார் தட்டி வந்ததின் பின்னனியில், அடுத்த ஆறு மாதத்தில் இந்த தவெக ஆட்சி கவிழ்ந்து விடும், அதற்கான வேலையை திமுக தரப்பில் இருந்து செய்யப்பட்டு வருகிறது என திமுக எம் எல் ஏக்களுக்கு கொடுக்கப்பட்டு நம்பிக்கை தான் என தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது குறைந்தது 15 தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விடுவோம், அதற்கான பேரம் நடந்து கொண்டிருக்கிறது, அடுத்து வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது, அந்த குறிப்பிட்ட சட்டமன்ற ஊர்ப்பினர்களை தவெக வுக்கு எதிராக வாக்களிக்க வைத்து ஆட்சியை கவிழ்ப்பது அல்லது, அந்த குறிப்பிட்ட தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக துணையுடன் திமுக ஆட்சி அமைப்பது என வியூகம் வகுத்து வேலை செய்தது திமுக தரப்பு.

ஆனால் தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி கையும் களவுமாக மாட்டி கொண்டது திமுக தரப்பு, இதனால் பேரம் பேசப்பட்டவர்கள் மீது வழக்கு பாய்ந்து, கைதும் செய்யப்பட்டார்கள், இதனை தொடர்ந்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற திமுகவின் வியூகம் தோல்வியை தழுவியது, மேலும் அணைத்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் அலர்ட் செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தவெக எம் எல் ஏ க்களை விலைக்கு வாங்கும் முயற்சியை கைவிட்டது திமுக, இந்நிலையில் தவெக தரப்பில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனிடம் பல திமுக எம் எல் ஏ க்கள் திரைமறைவில் பேசிக்கொண்டே இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இதன் அடிப்படையிலே தான், பேட்டி ஒன்றில் கூட திமுகவில் இருந்து எம்எல்ஏக்கள் தவெக வுக்கு வருவார்கள் என செங்கோட்டையன் சூசமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தல் முடிவுக்காக தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைதேர்தல் முடிவுகளை பொறுத்து, திமுகவில் தொடரலாமா அல்லது தங்களுடைய எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்து விடலாமா என என்கிற முடிவை திமுக எம் எல் ஏ சுமார் 8 உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தலில் திமுக தோல்வியை தழுவினால், இனியும் திமுகவில் பயணிப்பது சரியாக இருக்காது என தவெக வுக்கு தவுவதற்கு தயாராக இருக்கிறார்கள் 8 திமுக எம் எல் ஏ என்கிற தகவல் திமுக தலைமையை கதிகலங்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் நடந்து முடிந்துள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பாதகமாகவே முடியும் என தேர்தல் களத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது, இரண்டு தொகுதிகளிலும் திமுகம் 3வந்து இடம் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், இதில் தாராபுரம் தொகுதியில் திமுக டெபாசிட் இழக்க கூட வாய்ப்புள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.