எடப்பாடிக்கு போன் போட்ட ஸ்டாலின்… தொழில் அதிபர் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தை… விஜய்க்கு எதிராக நடந்த திட்டம்…

0
Follow on Google News

தவெக ஆட்சி ஆட்சி அமைத்து 4 மாதங்கள் கடந்த நிலையில், நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தல் தமிழக அரசியலில் மிக முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. அதாவது இந்த தேர்தல் முடிவுகள் கடந்த நான்கு மாத தவெக ஆட்சிக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக பார்க்க படுகிறது, அதே நேரத்தில் தவெகவுக்கு எதிரான பலம் பொருந்திய கட்சி எது, அதிமுகவா.? அல்லது திமுகவா.? என்பதையும் முடிவு செய்யும் தேர்தலாக இந்த இரண்டு இடைதேர்தலும் பார்க்க படுகிறது.

இந்நிலையில் தவெக சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தர்வர்கள். ஆனால் அதிமுகவில் இருந்து விலக இவர்கள் சொல்லும் காரணம், திமுகவும் அதிமுகவும் கடந்த சட்டசபை தேர்தல் முடிந்ததும் கூட்டு சேர பார்த்தார்கள் அதனால் தான் , நாங்கள் வெளியானோம் என குற்றசாட்டுகளை தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2026 சட்டசபை தேர்தல் முடிந்த பின்பு அதிமுக – திமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்க பார்த்தார்களா.? என்ன நடந்தது என்கிற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. கடந்த 2026 சட்டசபை தேர்தல் முடிந்தது திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை, அதே நேரத்தில் விஜய் முதல்வராக பொறுப்பேற்பதை திமுக விரும்ப வில்லை.

இதனை தொடர்ந்து பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மூலமாக திமுக – அதிமுக இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. அதாவது அந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலே பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது, அந்த கட்டுமான நிறுவனத்தின் வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் வரவழைக்கப்பட்டு இருக்கிறார், எடப்பாடி தரப்பில் அவருடைய மகன் மிதுன் பழனிசாமையும் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.

ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. மிதுன் மூலமாக அவருடைய தந்தை பழனிசாமிக்கு தகவல் சென்று கொண்டே இருந்திருக்கிறது, உதயநிதி மூலமாக அவருடைய தந்தை ஸ்டாலினுக்கு தகவல் சென்று கொண்டே இருந்திருக்கிறது, திமுக தரப்பில் அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறோம், எங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம், ஆனால் எங்கள் மீது உள்ள உழல் வழக்குகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என திமுக தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு எடப்பாடி பழனிசாமியும் க்ரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறார்.இதனை தொடர்ந்து திமுக தரப்பில் இருந்து கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது, இதில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்க கம்யூனிஸ்ட் கட்சி ஏற்று கொள்ளவில்லை, இதற்கு இடையில் காங்கிரஸ் கட்சி முண்டியடித்து கொண்டு தவெக வுக்கு ஆதரவு அளிப்பததாக தெரிவித்தது.

ஒரு கட்டத்தில் அதிமுகவில் ஒரு தரப்பினர் சரி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்று கொள்ள வில்லை என்றால், திருமாவளவன் முதல்வராக பதவி ஏற்கட்டும், அதிமுக அமைச்சரவையில் இடம் பெறட்டும் , தமிழகத்தில் முதல் தலித் முதல்வர் என்பதால், அதிமுக – திமுக இணைந்து ஆதரவளித்தாலும் எந்த ஒரு விமர்சனமும் வராது என அதிமுகவில் ஒரு தரப்பினர் தெரிவிக்க, அதற்கு எடப்பாடி ஒப்பு கொள்ள வில்லை, இதன் பின்பு விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் விஜய் முதல்வராக ஆதரவளித்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் அதிமுக – திமுக இரண்டு கட்சிகளும் ஒன்றிணைத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்க கூடாது என பலவகைகளில் முயற்சி செய்து இருந்து இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் முயற்சி கைகொடுக்கவில்லை, இதில் இடையில் திடீரென தொல் திருமாவளவனும் முதல்வர் கனவில் மிதந்து இருக்கிறார், அதுவும் நடக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.