உத்திரபிரதேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..!புள்ளி விவரத்துடன் இன்றைய உத்திரபிரதேச கள நிலவரம் இதோ..

0

உத்திரபிரதேச சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாருக்கு வெற்றி வாய்ப்பு என பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் இந்த சூழலில் புள்ளி விவரத்துடன் தற்போதையை உத்திரபிரதேச தேர்தல் கள நிலவரம் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் பிரபல அரசியல் வல்லுநர், அவர் தெரிவித்ததாவது, புள்ளி விவரங்களை பாருங்கள்.ஒரு மாநிலத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும்,அதே மாநிலத்தில் நடக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கும் உள்ள விதியாஸம்தான் மோடியின் பலமென்ன என்று காண்பிப்பது..

மாநிலத்தில் ஒருவரை முன்னிறுத்தியோ அல்லது பாஜக ஆட்சி அமைய வாக்கு கேட்கும் போதோ கட்சிக்கு வருகிற வாக்குகளை விட,மோடி தன்னை முன்னிறுத்தி கேட்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெறுகிற வாக்குகள் அதிகம்.. உதாரணமாக உத்திரபிரதேசத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.2012 சட்டமன்ற தேர்தலில் வெறும் 15% எடுத்த பாஜக 2014 ல் மோடி பிரதமராக 42% வாக்குகளை வாங்கி இணையற்ற வெற்றியை பெற்றது.

அடுத்து 2017 ல் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே சட்டமன்ற தேர்தலை சந்தித்து 39% வாக்குகளை பெற்று பின்பு யோகியை முதல்வராக அமர்த்தினார்கள்.2019 நாடாளுமன்ற தேர்தலில் 50% வாக்குகளை மோடி பிரதமராக மக்கள் வழங்கியுள்ளார்கள்.. ஆக,மோடியின் தேசிய எழுச்சி உபியில் பாஜகவை 50% வாக்குகளுக்கு கொண்டு போய்விட்டது..அதற்கு காரணமென்ன என்று ஆழமாக கவனிக்க வேண்டும்..

யாதவ் அல்லாத OBC,ஜாதவ் அல்லாத SC சமூகங்களை தங்களுக்கு சாதகமான வாக்காளர்களாக பாஜக மாற்றியதுதான் காரணம்.. கோரி,குர்மி,குஷ்வாஹா,கும்பார்(பிரஜாபதி),ராஜ்பார்,நிஷாத்,காஷ்யப் போன்ற எண்ணற்ற OBC சமூகங்களுக்கு அரசியல் எழுச்சியும் அடையாளமும் மோடியாலும் பாஜகவினாலும்தான் கிடைக்கிறது.இதுவேதான் ஜாதவ் அல்லாத SC பிரிவினரான ராஜ்பாசி,பஸ்வான்,ரவிதாச,சாமர் போன்ற எண்ணற்ற சமூகங்களுக்கும் பாஜகவினால் நிகழ்ந்தது..

இந்த வாக்குகளை அகிலேஷாலோ அல்லது மாயாவதியாலோ வாங்க முடியாது.காங்கிரஸினால் கற்பனையே செய்ய முடியாது அது அங்கே களத்திலே இல்லை.இதற்கும் மேல் பூமிகார் மற்றும் பிராமணர்களுடன் தாக்கூர்களுக்கு பிரச்சனை இருந்தாலும் அதனால் வாக்குகள் உடையும் என்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. மீடியாக்கள் அகிலேஷ் ஏறி வருகிறார் என்று பேசப்பேச பிராமணர் – Non யாதவ் OBC – பட்டியல் சமூகங்கள் திரண்டு பாஜகவிற்கு கேள்வியே கேட்காமல் வாக்களிக்கும் என்பதே நிதர்சனம்..

இதற்கும் மேல் ராமஜென்மபூமி – காசி விஸ்வநாதர் ஆலய புனரமைப்பு என ஹிந்துக்களின் அடையாளத்தை மீட்டெடுத்தது ‘மோடி – யோகி’ கூட்டணிதான்..உ.பியின் நிகரற்ற வளர்ச்சியை கண் முன்னாலேயே பார்க்கிறார்கள் மக்கள்.. ஆகவே,உபியில் நடக்கும் தேர்தலானது வெற்றிக்கும் – தோல்விக்கும் இடையேயானது இல்லை.வெற்றிக்கும் அதீத வெற்றிக்குமாக பாஜக தங்களுக்குள்ளே நடத்தும் போட்டி..அவ்வளவே..என பாஜக வெற்றி பிரகாசமாக இருப்பதாக பிரபல அரசியல் வல்லுநர் சுந்தர் ராஜன் சோழன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here