அமைச்சரை வைத்து நோண்டிவிடுவோம்… மிரட்டும் திமுக நிர்வாகி… ஆதாரத்துடன் கிழித்த நயினார் நாகேந்திரன்…

0
Follow on Google News

திமுக ஆட்சியில் ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது, மறுப்பக்கம் திமுகவினர் அட்டூழியம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, என நாலா பக்கமும், திமுக ஆட்சியில் சாமானிய பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில், அரசு அதிகாரிகள் கடமையை செய்ய முடியாதபடி திமுகவினரின் மிரட்டலுக்கு உள்ளாகி வருவது, ஏற்கனவே திமுக ஆட்சியில் அரசு இயந்திரம் செயல்படவில்லை என்கிற குற்றசாட்டு இருந்து வரும் நிலையில், தற்பொழுது திமுக நிர்வாகிகளின் அராஜகத்தால் , முற்றிலும் அரசு இயந்திரம் முடங்கி போகும் சூழல் உருவாகி இருக்கிறது.

அரசு அலுவலகங்களை முற்றிலும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது போன்று திமுக நிர்வாகி ஒருவரின் செயல் உச்சக்கட்ட அராஜகமான அமைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கடமையைச் செய்யும் அதிகாரியை மிரட்டும் கமிஷன் மாடல் அரசு என ஆதாரத்தை வெளியிட்டு மக்கள் மத்தியில் திமுகவின் முகத்திரையை கிழித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,

சென்னை புரசைவாக்கம் பகுதியில் மெட்ரோ வாட்டர் இணைப்பு பெற்ற குடியிருப்பாளர்களிடமிருந்து லஞ்சம் வராததால், உதவிப் பொறியாளருக்குத் திமுக வட்டச் செயலாளர்கள் இருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் ஒலிப்பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது, அதிலும் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் இணைப்பை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என அரசுப் பணியாளரை மிரட்டியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

மேலும், இணைப்பைத் துண்டிக்கவில்லை என்றால் “அமைச்சரை வைத்து நோண்டிவிடுவோம்” என்றும் “மெட்ரோ வாட்டரை நாசம் செய்துவிடுவேன்” என்றும் தரக்குறைவாகப் பகிரங்கமாக அச்சுறுத்துவது திமுகவினரின் ஒட்டுமொத்த அடாவடித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

மேலும், ஒரு புறம் மக்களுக்குத் தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்யாமல் கோபாலபுரத்தின் புகழை மட்டும் பாடும் திமுக அமைச்சர்கள், மறுபுறம் தன் கடமையைச் சரிவரச் செய்யும் அரசுப் பணியாளர்களை அச்சுறுத்தி பணியை நிறுத்தி லஞ்சம், கமிஷன் என மக்களின் பணத்தை ஒட்டுண்ணியாக உறிஞ்ச திட்டமிடும் திமுக உடன்பிறப்புகள். இப்படி ஓரணியில் திரண்டு தமிழகத்தைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் திமுகவினர் நம் அனைவருக்கும் ஆபத்து என எச்சரித்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்