சார் நான் இந்து சார். இல்லை சார் நீங்க திருடன்.! திமுக -பாஜக இடையே நடந்த அனல் பறந்த விவாதம்.! வைரல் வீடியோ உள்ளே..

0
Follow on Google News

சமீபத்தில் தந்தி டிவியில் நடந்த விவாதத்தில் திமுக -பாஜக இடையே நடந்த அனல் பறந்த விவாத வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, நேற்று முன் தினம் தந்தி டிவியில் நடந்த ஆயுத எழுத்து நிகழ்ச்சியில், திமுக சார்பில் கலந்து கொண்ட சபாபதி மோகன், மற்றும் பாஜக சார்பில் கலந்து கொண்ட அந்த கட்சியின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் இடையில் திமுகவில், இருக்கும் இந்துக்கள் திருடர்களா.? இல்லையா.? என்கிற கார சார விவாதம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் சபாபதி மோகன் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்எஸ்எஸ் வகுப்பில் அமர்ந்துகொண்டு இந்துத்துவா படிப்பதாக கூறினார், இதற்கு பதில் அளித்த பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் எது இந்துத்துவா.? எங்கள் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசினார், அது இந்துத்துவா கிடையாதா.? பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கையில் வேலுடன் யாத்திரை நடத்திய பின்பு, ஸ்டாலினும் வேலுடன் காட்சி தருகிறார், இது இந்துத்துவா கிடையாதா.?அப்படியானால் நீங்களும் இந்துத்துவா வகுப்பில் தானே இருக்கின்றீர்கள் என தெரிவித்தார்.

இதற்கு சபாபதி மோகன் இந்து வேற இந்து மதவெறி வேற என தெரிவித்தவர், நான் இந்துவா?இல்லையா? என கேள்வி எழுப்பினார், இதற்கு பேராசிரியர் பேசுகையில், சபாபதி மோகன் நானும் இந்து தான் என பெருமையாக பேசுகிறார், அப்படியானால் அவர்கள் கட்சி தலைவர் கருணாநிதி இந்து என்றால் திருடன் என்று சொன்னாரே, அப்படியானால் உங்களை திருடன் என்று சொன்னாரா, நீங்கள் திருடனாஅதை ஏற்றுக் கொள்கிறாரா.? சபாபதி மோகன் என தெரிவித்தார்.

இதற்கு சபாபதி மோகன் பேசுகையில். நான் ஒரு அப்ளிகேசன் பார்மில் பூர்த்தி செய்யும் போது மதம் என்று குறிப்பிட்ட இடத்தில் இந்து என்று தான் பூர்த்தி செய்கின்றேன், அப்படியானால் நான் இந்து தானே என பேசினார். இதற்கு பேராசிரியர் மதம் என்ற இடத்தில் திருடன் என்று பூர்த்தி செய்யுங்கள், உங்கள் தலைவர் கருணாநிதி இந்து என்றால் திருடன் என்று தானே சொல்லியிருக்கிறார் அப்படியானால் திருடன் என்று தான் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்த அனல் பறக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .