விஜய்க்கு அஸ்ரா கார்க் கொடுத்த ரிப்போர்ட்… அதிரடியாக மாற்றபட்ட அதிகாரிகள்… ஓ… இதுக்கு தான் சவுக்கு சங்கர் கதறுகிறாரா.!

0
Follow on Google News

சமீபத்தில் தமிழக தலைமை செயலர் உட்பட பல IAS மாற்றும் IPS அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக ஆட்சி மாற்றம் நடந்தால் IAS மற்றும் IPS அதிகாரிகள் மாற்றம் செய்வது வழக்கம், ஆனால் த வெ க ஆட்சியில் உடனே அப்படி மாற்றம் செய்யாமல் , அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணித்தே இந்த அதிரடி மாற்றம் அரங்கேறி இருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தில் IAS மற்றும் IPS அதிகாரிகள் அதிரடி மாற்றத்தின் பின்னனியில் தமிழக உளவு துறை ஐஜி அஸ்ரா கார்க் இருப்பதாகவே பரவலாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு IAS மற்றும் IPS அதிகாரிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து அவர்கள் குறித்த ரிப்போர்ட்டை முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு எடுத்து செல்கிறார் உளவு துறை ஐஜி அஸ்ரா கார்க் , இதன் பின்பே இந்த அதிரடி மாற்றம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தமிழக உளவுத்துறை ஐ ஜியாக இதுக்கும் அஸ்ரா கார்க் முன்னாள் முதல்வர் கருணாநிதி மகனுக்கே தண்ணி காட்டியவர் என்பது தற்போதைய தலைமுறையினர் பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

2006 முதல் 2011 வரையிலான கால கட்டம். மதுரை மு.க.அழகிரியின் கோட்டையாக இருந்த காலம். துணை முதல்வர் ஸ்டாலினே மதுரையில் ஏதாவது நிகழ்வு என்றால் தவிர்க்கும் அளவுக்கு அழகிரியின் கை ஓங்கியிருந்த காலம். அந்த நேரத்தில் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. தேர்தல் ஆணையத்தின் கைக்கு அதிகாரம் போனதும், மதுரையில் யாரை போட்டால் தேர்தலை அமைதியாக நடத்தலாம் என்று யோசித்தவர்கள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டனர்.

அஸ்ரா கார்க் அதிரடிக்கு முன்னால் மு.க.அழகிரியின் தேர்தல் வியூகங்கள் எல்லாம் தோற்றுப் போயின. அதற்கு முன்பு திமுக ஆட்சியில் நடந்த மதுரை மேற்கு தொகுதி, திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தலின் போது, அதிமுகவினரை ஓட ஓட விரட்டிய திமுகவினர், 2011-இல் அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது. அந்தத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக படுதோல்வியை சந்தித்தது.

அஸ்ரா கார்க் இந்தப் பணியை பாராட்டும் விதமாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தேர்தல் ஆணையம் நியமித்த இந்த அதிகாரிகளையே மதுரையில் தொடரச் செய்தார். இதனை தொடர்ந்து முக அழகிரியின் வலது கரம் என சொல்லப்பட்ட முக அழகிரி ஆதரவாளர் பொட்டு சுரேஷை கைது செய்து தரையில் அமர வைத்த பெருமை அஸ்ரா கார்க்குக்கு உண்டு.

ஆட்சி அதிகாரம் இருந்தபோது ஒரு பெண் போலீஸ் அதிகாரியை மிகக் கேவலமான வார்த்தைகளால் பொட்டு சுரேஷ் திட்டியிருந்த தகவலை அறிந்த அஸ்ரா கார்க், அதே பெண் போலீஸை வைத்து பொட்டு சுரேஷ் வழக்கை பதிவு செய்ய வைத்தார். அந்தப் பெண் அதிகாரி முன்பு தரையில் உட்கார வைக்கப்பட்டார் பொட்டு சுரேஷ். அப்படி நேர்மைக்கு பெயர் போன ஒரு துணிச்ச்சலான அதிகாரியை தான் முதல்வர் விஜய் தமிழக உளவு துறை ஐஜி யாக நியமித்து இருக்கிறார்.

ஆனால் இப்படி பட்ட ஒரு நேர்மையான அதிகாரியான தமிழக உளவு துறை ஐஜி அஸ்ரா கார்க் குறித்து தொடர்ந்து தன்னை அரசியல் விமர்சகர் என்று சொல்லி கொண்டு வீடியோ போடும் சவுக்கு சங்கர் அவதூறு பரப்பும் வகையில், அஸ்ரா கார்க் தமிழக முதல்வர் விஜய்யை தவறாக வழிநடத்துகிறார் என்கிற பொய்யான குற்றசாட்டுகளை வைத்து வருகிறார்.

இது குறித்து விசாரித்ததில், சவுக்கு சங்கர் சமீபத்தில் தவெக அரசுக்கு எதிராக பேச மாப்பிளை சார் என்று அழைக்க கூடிய திராவிட மாப்பிளையை ரகசியமாக சந்தித்து டீலிங் பேசியதாகவும், திராவிட மாப்பிளையை சவுக்கு சங்கர் சந்தித்த பின்பே தவெக அரசுக்கு எதிராக பேசி வருவது குறித்தும் உளவு துறை மூலம் முதல்வர் விஜய் கவனத்துக்கு சென்று இருக்கிறது, இது தான் உளவு துறை ஐஜி யாக இருக்கும் அஸ்ரா கார்க் மீது சவுக்கு சங்கருக்கு வன்மம் ஏற்பட்டு இப்படி உளவு துறை ஐஜி அஸ்ரா கார்க் எதிராக பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.