விசிகவுக்கு வாக்கு வாங்கியே இல்லை… நிரூபித்த இடைதேர்தல்… ரெண்டு சீட்டே அதிகம் தான்…

0
Follow on Google News

நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிக்கான தேர்தல், தமிழகத்தின் பிரதான கட்சியான தவெக , திமுக , அதிமுக ஆகிய கட்சிகளுக்கும் மட்டுமில்லை தவெக உடன் ஒட்டி கொண்டிருக்கும் சிறிய சிறிய கட்சிகளான மதிமுக, விசிக கட்சிகளுக்கும் மற்றும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் , கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் ஒரு பல பரிட்சையாக தான் அமைந்து இருந்தது.

குறிப்பாக ஒவ்வொரு கட்சிக்கும் என்ன செல்வாக்கு உள்ளது, எந்தத்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு வாங்கி இருக்கிறது என்பதை உணர்த்தும் தேர்தலாக அமைத்துள்ளது , நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் , அந்த வகையில் திமுக , அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி பலம் இல்லாமல் தனித்து களம் இறங்கியது, பாமக எந்த கட்சிக்கு ஆதரவு இல்லை என தெரிவித்து தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கி கொண்டது,

தவெக பெயரளவில் கூட்டணி உடன் என்றாலும், தேர்தல் பிரச்சாரம் முதல் தேர்தல் பனி வரை தவெக கூட்டணி கட்சிகளை தவிர்த்தே வேலை செய்து வந்தது. இந்நிலையில் திமுக கடந்த 2016 பொது தேர்தலுடன் ஒப்பிடுகையில், மதுராந்தகம் தொகுதியில் 1 சதவிகிதம் வாக்கு அதிகமாகவும், தாராபுரம் தொகுதியில் 0.42 சதவிகிதம் வாக்கு குறைவாகவும் பெற்று இருக்கிறது.

அந்த வகையில் கடந்த பொது தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக வாங்கிய வாக்குகளுக்கும் தற்பொழுது இடைதேர்தலில் வாங்கி வாங்குகளுடன் ஓப்ப்டிடுகையில், கூட்டணி கட்சிகள் வெளியேறியதால் திமுக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குகள் குறைந்து இருக்க வேண்டும்.

ஆனால் வாக்கு சதவிகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, இதில் குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் திமுகவின் வாக்கு சதவிகிதம் 1 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது என்றால், கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு வாக்கு சதவிகிதமே இல்லை என்பது நிரூபணமாகி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். மேலும் கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி,

இம்முறை தனித்து போட்டியிட்டு, தொகுதிக்கு சுமார் 1000 ஒட்டு வாங்கி இருக்கிறது என்றால், ஒரு வேலை விடுதலை சிறுத்தை கட்சி , மதிமுக போன்ற கட்சிகள் தனித்து போட்டியிட்டாலும் கூட இதே நிலை தான என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அந்த வகையில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு தமிழகத்தில் பெரிதாக வாக்கு வங்கி இல்லை, சுவர் விளம்பரம் மாநாடு போன்ற நிகழ்வுகளால் கடந்த காலங்களில் திமுகவை ஏமாற்றி வந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மேலும் விசிக இடம் பெரும் கூட்டணியே வெற்றி பெரும் என திருமாவளவன் , இடைதேர்தலில் தவெக வெற்றி குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் நிலையில், இடைதேர்தலில் தவெக வெற்றி பெற்றதில், விசிக பங்கு எங்கே இருக்கிறது. கடந்த பொது தேர்தலில் அதிமுக வாங்கிய வாக்கு சதவிகிதத்தை விட இடைதேர்தலில் அதிமுக வாக்கு சதவிகிதம் பெருமளவு குறைந்து இருக்கிறது என்றால், கடந்த முறை அதிமுகவுக்கு விழுந்த வாக்கு இடைதேர்தலில் தவெக வுக்கு விழுந்து இருக்கிறது.

அந்த வகையில் அதிமுக வாக்குகள் தவெக பக்கம் மாறி இருப்பதால் தான் தவெக வெற்றி பெற்று இருக்கிறது என தெரிவிக்கும் அரசியல் வல்லுநர்கள், திமுக கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட இம்முறை குறைந்த வாக்குகளை பெற்று இருந்தால், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விசிக , மதிமுக, காங்கிரஸ் ஆகிய காட்சிகள் வெளியேறியதால் வாக்கு குறைந்து இருக்கிறது, அதனால் விசிக போன்ற கட்சிகளும் தமிழகத்தில் வாக்கு வங்கி இருக்கும் என கணக்கிடலாம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.