900 வருடம் வழிபாடு… தடுத்து நிறுத்திய தொல்லிய துறை…. உடனே களம் இறங்கி காப்பாற்றிய எஸ்ஜி சூர்யா…

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருடத்தில் ஒரு முறை புரட்டாசி மாதத்தில் மலைமேல் குமரன் விழா மிக சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது, சுமார் 900 ஆயிரம் வருடங்களாக இந்த விழா ஒவ்வொரு வருடமும் கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதாவது திருப்பரங்குன்றம் மலை மீது நக்கீரர் சுனை உள்ளது, இந்த சுனைக்கு திருப்பரங்குன்றம் மலை கீழே உள்ள முருகன் கோவிலில் இருந்து வேல் எடுத்து செல்லப்பட்டு,

நக்கீரர் சுனையில் வேல் க்கு தீர்த்தல் ஆடி, பின்பு சுனையில் சைவ உணவு சாப்பிட்டு வேலை கீழே முருகன் கோவிலுக்கு கொண்டு வருவது தன மலைமேல் குமரன் விழா என்று கொண்டாட பட்டு வருகிறது, ஆனால் இந்த வருடம் புரட்டாசி மாதம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கும் , அறநிலை துறை சார்பில் மத்திய தொல்லியல் துறைக்கு கடிதம் அனுப்பி, மலை மீது சமைத்து சாப்பிட தடை விதிக்கும் வகையில் ஒரு சூழலை உருவாக்கியது அறநிலை துறை.

இதனை தொடர்ந்து அக்டோபர் 9ம் தேதி நடைபெற வேண்டிய இந்த மலைமேல் குமரன் விழாவுக்கு எதிராக முதல் நாள் தொடங்கி பல சர்ச்சைகள் வெடித்து கொண்டிருந்தது, மேலும் மத்திய தொல்லியல் துறை அனுமதி இல்லாமல் மேலே நக்கீரர் சுனையில் சமைக்க அனுமதிக்க முடியாது என அறநிலை துறையும் போலீசாரும் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 900 வருட பாரம்பரிய வழிபாடுக்கு தடையை என்கிற செய்தியை கேட்டு உடனே களம் இறங்கினர், பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ் ஜி சூர்யா.

நிகழ்வுக்கு நடக்கும் முதல் நாள் மத்திய தொல்லியல் துறை அனுமதிக்காக உடனே தொல்லியல் துறை உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசிய எஸ் ஜி சூர்யா, அடுத்ததாக மத்திய சுற்றுலா த்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தொடர்பு கொண்டு திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்தும், மத்திய தொல்லியல் துறை அனுமதி வேண்டும் , 900 வருட பாரம்பரிய வழிபாட்டு முறை, இது தடை பட கூடாது என்பதை விளக்கமாக மத்திய சுற்றுலா துறை அமைச்சரிடம் பேசி இருக்கிறார் எஸ் ஜி சூர்யா.

அதற்கு அடுத்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் தொடர்பு கொண்டு பேசிய எஸ் ஜி சூர்யா திருப்பரங்குன்றம் நிலவரம் குறித்து விவரித்து இருக்கிறார், இதனை தொடர்ந்து தென் மாவட்டத்தின் மத்திய தொல்லியல் துறையின் தலைமையகமான திருச்சியில் இருந்து மலைமேல் குமரன் விழாவுக்கு அனுமதி கொடுத்து இமெயில் மூலமாக நிகழ்வு நடக்கும் முதல் நாள் ஆர்டர் வந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து ஆர்டரில் மலை மேல் சமைக்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறை குறிப்பிடவில்லை என்று அறநிலை துறை மீண்டும் மலைமேல் குமரன் விழாவுக்கு முட்டு கட்டையை போடுகிறது, இதனை தொடர்ந்து இந்த விவகாரம் நீதிமன்றம் செல்கிறது, அங்கே நீதிமன்றத்திற்கு நேரடியாக சென்ற எஸ் ஜி சூர்யா, பல தகவல்களை வழக்கறிகளுக்கு வழங்கி மலை மேல் சமைத்து நக்கீரர் சுனையில் வேல் தீர்த்தல் ஆடி, மலைமேல் குமரன் விழாவை கொண்டாட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து 900 வருடமாக பாரம்பரியமாக கொண்டாட்டப்பட்டு வந்த மலைமேல் குமரன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, இந்த நிகழ்வு நடக்கும் போது, அதாவது நக்கீரர் சுனையில் இருக்கும் தீர்த்தத்தை வேலுக்கு தீர்த்தம் ஆடும் போது, மழை வரும் என்பது ஐதீகம் , அதன் படியே வேல் தீர்த்தமாட பட்டபோது திருப்பரங்குன்றத்தில் மழை பொழிந்தது, இதனை தொடர்ந்து 900 வருட பாரம்பரிய வழிபாட்டை காப்பாற்றி கொடுத்த பாஜக இளைஞரணி தலைவர் எஸ் ஜி சூர்யாவுக்கு முருக பக்தர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.