நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு வாரமாக குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி சீனா இந்தியா நிலப்பகுதியை ஆக்கிரமித்து விட்டதாக குற்றசாட்டினார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர், இதில் உச்சகட்டமாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அமரும் இருக்கையை நோக்கி சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோர் பிரதமர் மோடி இருக்கையை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பி இருந்தனர்.

ஆனால் அப்போது பிரதமர் மோடி இருக்கையில் இல்லாததால், காலி இருக்கையை சூழ்ந்து கொண்டு ஜோதிமணி, சுதா இரண்டு பெண் எம்பிகளும் கூச்சலிட்டனர். இது ஒரு திட்டமிட்ட செயல் என்றும், குறிப்பாக பிரதமர் மோடியை சூழ்ந்து கொண்டு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே காங்கிரஸ் பெண் எம்பிக்கள் திட்டமிட்டதாக குற்றசாட்டுகள் எழுந்து இருக்கிறது.
பிரதமர் மோடி சம்பவம் அன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுவதாக இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் சதியை முன்கூட்டியே அறிந்து பிரதமரை வர வேண்டாம் என சபாநாயகர் மற்றும் பாஜக எம்.பி.க்கள் கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் ”நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர். அதனால் அவரை நான் தான் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என்று கூறியிருந்தேன்” என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை பிரதமருக்கு எதிராக திட்டமிட்டு இருந்ததாகவும் ஓம்பிர்லா குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக மேலும் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் என்ன நடந்தது என்பதை நாடு பார்த்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரதமர் இருக்கையை நோக்கி எப்படிச் சென்றார்கள் என்பதையும் அனைவரும் பார்த்தனர்.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடும் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, பிரதமர் மோடியை இன்று அவைக்கு வர வேண்டாம் என்று நான் தெரிவித்தேன் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி நாடாளுமன்ற இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கையில், சூழ்ந்து கொண்டு என்ன செய்யவேண்டும் என ஏற்கனவே திட்டமிட்ட செயல் உளவுதுறை மூலம் சபாநாயகர் ஓம் பிர்லா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது, அப்போது உளவு துறை அதிகாரிகள் இதை இப்படி கையாள போகிறீர்கள் , முன்னெச்செரிக்கையாக நடவடிக்கை எடுத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்படும் என்றும் உளவு துறை அதிகாரிகள் சபாநாயகரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தான் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்திற்கு வரவேண்டாம் என சபாநாயகர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிரதமருக்கு மிக பெரிய அவமரியாதை ஏற்படும் வகையில் எதிர்க்கட்சிகளின் சதி திட்டம் முறியடிக்கும் வகையில் , பிரதமர் மோடியை நாடாளுமன்றத்திற்கு வரவேண்டாம் என சபாநாயகர் தெரிவித்து இருக்கிறார் என்கிறார்கள் மூத்த அரசியல் விமர்சர்கர்கள்.

