தமிழக பாஜகவின் மிக மூத்த தலைவராக இருந்த CP ராதாகிருஷ்னன், கடந்த 2023ம் ஆண்டு ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்க படுகிறார், அதனை தொடர்ந்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர் ராஜன், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததும், அந்த இரண்டு மாநிலத்திற்கு கூடுதல் ஆளுநராக CP ராதாகிருஷ்னன் நியமிக்கப்படுகிறார், 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து மோடி பிரதமராக பொறுப்பேற்றதும், மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.
தற்பொழுது பாஜக சார்பில் இந்தியாவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து உயரிய பதவி கொடுத்து CP ராதாகிருஷணனை கெரவப்படுத்துவத்தின் பின்னணி என்ன.? பிரதமர் மோடியின் மனசாட்சி என்று சொல்ல கூடியவகையில், பிரதமர் மோடிக்கு நம்பிக்கை கூறியவராக CP ராதாகிருஷ்னண் திகழ காரணம் என்ன என்கிற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போதிய நாடாளுமன்ற உறுப்பினர் கைவசம் இல்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி இருந்தது. இந்த ஒரு சுழலில் நிதிஷ்குமார் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தாலும் , சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்க முன் வரவில்லை.
ஆனால் ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்த CP ராதகிருஷ்னன் தான் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி பாஜகவுக்கு ஆதரவளிக்க வைத்து, மீண்டும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்தார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே , ஒரு வேலை பாஜக தனி மெஜாரிட்டி வரவில்லை என்றால் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவை பெற்று தருவது உங்கள் பொறுப்பு என CP ராதாகிருஷ்ணனிடம் பிரதமர் மோடி கொடுத்த அசைன்மென்ட்டை நிறைவேற்றி பிரதமர் மோடியின் நம்பிக்கை கூறியவராக இருந்தவர் CP ராதாகிருஷ்ணன்.
மேலும் முன்னால் துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் காங்கிரஸ் உடன் திரைமறைவில் கை கோர்த்து கொண்டு, பாஜக ஆட்சியை கவிழ்க்கும் வேலையாக, தெலுங்கு தேச கட்சி எம்பிகளை சந்தித்து , உங்கள் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி பாஜகவுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் வாங்க செய்யுங்கள் என பாஜகவுக்கு எதிராக ஜக்தீப் தன்கர் செயல்பட்ட தகவல் மோடி கவனத்துக்கு சென்றது.
இதனை தொடர்ந்து ஜக்தீப் தன்கர் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அடுத்த துணை ஜனாதிபதி யார் என்கிற பரபரப்புக்கு மத்தியில், தனக்கு நம்பிக்கை கூறியவராக ஒருவரை கொண்டு வரவேண்டும் , ஜக்தீப் தன்கர் போன்று ஒரு துரோகியை மீண்டும் நியமித்து விட கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் பிரதமர் மோடி.
இதனை தொடர்ந்து குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத் துணை ஜனாதிபதியாக வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த மோடியின் நம்பிக்கை கூறியவரான CP ராதகிருஷ்னன் பாஜக சார்பில் துணை ஜனாதிபதி வேட்ப்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். தமிழன் தன்னை நம்பியவர்களுக்கு நம்பிக்கையாக இருப்பான் என்பதற்கு மிக பெரிய உதாரணமாக திகழ்ந்துள்ளார் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் CP ராதாகிருஷணன்.
முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் செய்த துரோகத்தில் உடைத்து போய் இருந்த பிரதமர் மோடி, அடுத்து துணை ஜனதிபதி யார் என்கிற தேர்வில் இந்தியா முழுவதும் பல பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும் இறுதில் தேர்வு செய்யப்பட்டுள்ள CP ராதாகிருஷ்ணன் மோடியின் மனதை வென்று விட்டார் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

