நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் படுதோல்வியில் இருந்து கட்சியை மீட்டெடுக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது முதல் குடும்பம், குறிப்பாக ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் துர்கா ஸ்டாலின், அந்த வகையில் முக ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராக வாய்ப்பே இல்லை என்பது கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பே ஜோதிடர்களால் முதல் குடும்பத்திற்கு அறிவுறுத்தப்பட்டனர்.
இருந்தாலும் கூட சில பரிகாரம் செய்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது என ஜோதிடர் சொன்ன அறிவுரையை ஏற்று, கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு துர்கா ஸ்டாலின் போகாத கோவில் இல்லை, பண்ணாத பரிகாரம் இல்லை என்று சொல்லும் வகையில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பிற மாநிலத்தில் உள்ள திருத்தலங்களுக்கு எல்லாம் சென்று கணவர் முதல்வராக பரிகாரம் செய்து வந்தார் துர்கா ஸ்டாலின்.

அவருடைய பரிகாரத்திற்கு கிடைத்த பலனாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். இதனை தொடர்ந்து நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் முக ஸ்டாலின் அவருடைய சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியிலே தோல்வியை தழுவில், சட்டசபைக்கு கூட செல்ல முடியாமல் வீட்டிலே முடங்கி கிடக்கிறார்.
இதனை தொடர்ந்து மீண்டும் திமுக ஆட்சி அமைக்குமா.? கணவர் முதல்வராக பொறுப்பேற்பாரா.? கணவர் ஜாதகம் என்ன சொல்கிறது, வேறு எதுவும் பரிகாரம் செய்ய வேண்டுமா.? அப்படியே உதயநிதி ஜாதகம் என்ன சொல்கிறது ஏன் சமீபத்தில் ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறார் துர்கா ஸ்டாலின், அதற்கு ஜோதிடர் சில முக்கிய தகவல்களை துர்கா ஸ்டாலினிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதில் அடுத்து முதல்வராக முக ஸ்டாலினை முன்னிறுத்தி ஆட்சியை பிடிக்க முடியாது, அவருடைய ஜாதக கட்டம் அதற்கு வாய்ப்பளிக்காது, அதுவும் முதல்வராக இருக்கும் விஜய்யின் ஜாதக கட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது முக ஸ்டாலினால் விஜயை வீழ்த்த கூடிய வல்லமை பெற்ற ஜாதகமாக முக ஸ்டாலின் ஜாதகம் இல்லை. அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் கட்டம் அரசனாக ஆட்சி புரிவதற்கான அணைத்து அம்சமும் உள்ளது என்றும்.
மேலும் முதல்வராக இருக்கும் விஜய் ஜாதகத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, உதயநிதியின் ஜாதகம் விஜய் ஜாதகத்தை விட வல்லமை பெற்ற ஜாதகமாக உள்ளது, அந்த வகையில் விஜய்யை வீழ்த்த கூடிய பலம் உதயநிதி ஜாதகத்தில் இருக்கிறது என ஜோதிடர் துர்கா ஸ்டாலினிடம் ஆலோசனை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து முதல் குடும்பத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டு இருக்கிறது.
அதில் உங்களுக்கு நேரம் சரியில்லை , அதனால் கட்சியை முழுமையாக உதயாவிடம் ஒப்படைத்துவிட்டு , நீங்கள் அவரை வழிநடத்துங்கள், என துர்கா ஸ்டாலின் கனவர் முக ஸ்டாலினிடம் தெரிவித்து இருக்கிறார், அதற்கு ஸ்டாலினோ கட்சியை உதயநிதியிடம் ஒப்படைக்க மனமில்லாமல் மறுத்து வருகிறாராம், இதனால் முதல் குடுமபத்துக்குள் குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் விரைவில் உதயநிதி ஸ்டாலினிடம் திமுகவை முளுமையாக ஒப்படைக்கும் வேலை ஒரு பக்கம் நடந்து வருவதாகவும், அந்த வகையில் முக ஸ்டாலின் ஓரம் கட்டப்பட்டு, திமுக தலைமையை உதயநிதி ஸ்டாலின் முழுமையாக கைப்பற்றி வழிநடத்துவார் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், உதயநிதி எதிராக கனிமொழி ஒருபக்கம் காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

