தினசேவல் நியூஸ் மீது திமுக எம்.எல்.ஏ மூர்த்தி தரப்பில் வழக்கு பதிவு.! ஆதாரத்துடன் சட்டப்பூர்வமாக சந்திக்க தினசேவல் தயார்.!

0
Follow on Google News

சில தினங்களுக்கு முன் நமது தினசேவல் இணையதள நியூஸ் பக்கத்தில், மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளரும்,அதே தொகுதியின் எம்.எல்.ஏ மூர்த்தி குறித்து அந்த தொகுதி மக்கள் தெரிவித்த குற்றசாட்டுகளை விடியோவாக வெளியிடப்பட்டது , அந்த வீடியோவில் மூர்த்தி மீது உள்ள குற்றச்சாட்டுக்கு நமக்கு கிடைத்த ஆதாரத்தையும் இணைத்து வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், இந்த வீடியோ குறித்து மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில், வக்கீல் சங்கர் என்பவர் புகார் தெரிவித்துள்ளார், அதில் திமுக வேட்பாளர் மூர்த்தி குறித்து அவதூறான, பொய்யான செய்திகளை வீடியோ வாயிலாக தின சேவல் நியூஸ் பரப்பி வருவதாகவும்,இதனால் திமுக வேட்பாளர் மூர்த்தியின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வீடியோ தயார் செய்துள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளதாக செய்தியில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஒத்தக்கடை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தினசேவல் இணையத்தில் வெளியிடப்பட்ட திமுக எம்.எல்.ஏ மூர்த்தி குறித்த வீடியோ குறித்து, தினசேவல் நியூஸ் விளக்கம் கொடுக்க கடமை பட்டுள்ளது, அந்த வீடியோவில் மூர்த்தி குறித்து கூறப்பட்டுள்ள அணைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நம்மிடம் உள்ள ஆதாரத்தின் அடிப்படையில் தான் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் நாம் வெளியிட்ட வீடியோவில் யாதவ அறக்கட்டளை நிலத்தை அபகரிக்க முயன்றது, திமுக பெண் தலித் வேட்பாளரை சாதி பெயரை சொல்லி மூர்த்தி திட்டியதால் அவருக்கு எதிராக மதுரையில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது, பாஜக மாநில இளைஞரணி செயலாளர் சங்கர பாண்டி வீட்டிற்கு சென்று அவரை சாதி பெயரை சொல்லி திட்டியதும், அவரது மனைவியை செருப்பால் அடிக்க பாய்ந்த சம்பவம் உட்பட அனைத்துக்கும் நம்மிடம் ஆதாரம் உள்ளது.

அடுத்தடுத்து நமது தினசேவல் நியூசில், நாம் வீடியோவில் வெளியிட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுகளையும் மக்கள் மத்தியில் ஆதாரத்துடன் நிரூபித்து தினசேவல் நியூஸ் உண்மையை மட்டும் வெளியிட கூடிய செய்தி என நிரூபிக்கும் கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளதால், அடுத்தடுத்து இது குறித்து ஒவ்வொரு செய்தியாக வெளியிட தினசேவல் நியூஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பதை நமது வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.