விருதுநகர் தொகுதியில் அழுத்தமாக கால் பாதிக்கும் பாஜக.! வெளியான கருத்து கணிப்பில் பாஜக வெற்றி உறுதி.!

0
Follow on Google News

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் விருதுநகர் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என நடத்தப்பட்ட சர்வே ரிப்போர்ட் வெளியாகியுள்ளது, இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,24,327 உள்ளனர், இதில் ஆண் வாக்காளர்கள் 1,09,607, பெண் வாக்காளர்கள் 1,14,674 மற்ற பால் இனத்தவர் 46 பெரும் உள்ளனர், இந்த தொகுதியில் திமுக சார்பில் அந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ A.R.R.சீனிவாசன், பாஜக சார்பில் G.பாண்டுரங்கன், அமமுக சார்பில் M.தங்கராஜ், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மணிமாறன், நாம்தமிழர் கட்சி வேட்பாளராக செல்வகுமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ஆனால் இந்த தொகுதியில் பாஜக – திமுக இடையே மட்டும் போட்டி நடைபெற்று வருகிறது, தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திமுக வேட்பாளர் சீனிவாசன் தொகுதி வளர்ச்சிக்காக சொல்லும்படி ஏதும் செய்யவில்லை என்பது அந்த தொகுதி மக்களின் குமுறல்,மேலும் அவர் தொகுதி மக்களிடம் நெருக்கமாக இல்லாமல் ஒரு இடைவேளையை ஏற்படுத்தி விட்டார் என்றும், இதனால் அந்த தொகுதி மக்கள் ஒரு மாற்று நபரை தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கும் மனநிலைக்கு வந்துள்ளனர்.

பாஜக சார்பில் போட்டியிடும் பாண்டுரங்கன் வெற்றிக்கு அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் முதல், கிளை நிர்வாகிகள் வரை பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து தீவிர களப்பணியாற்றி வருபவது திமுக வேட்பாளரை திணறடித்து வருகிறது, இந்நிலையில் இந்த தொகுதியின் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அந்த கட்சியின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன், 1967 ஆம் ஆண்டு காமராசரை விருதுநகர் தொகுதியில் தோற்கடித்த திமுகவை பழி தீர்க்கவே பாஜக இங்கே போட்டியிடுவதாக அந்த தொகுதியில் செய்துவரும் பிரச்சாரம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது,

தொடர்ந்து அதே தொகுதியில் முகாமிட்டுள்ள பேராசிரியர், அந்த தொகுதிக்குட்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை சந்தித்து மத்திய அரசு அந்த சமூக மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட்டது, போன்ற சாதனைகளை அம்மக்களின் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் அடுத்தடுத்து பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் விருதுநகர் தொகுதிக்கு வர இருப்பது தமிழகத்தில் இந்த தொகுதி முக்கியத்துவம் பெற்று வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் உள்ள சுமார் 80 ஆயிரம் மக்கள் வரை யாருக்கு உங்கள் வாக்கு என கருத்து கேட்டதில் 51% சதவிகித மக்கள் பாஜகவுக்கும், 39.5% சதவிகித மக்கள் திமுக, 3% சதவிகிதம் அமமுக, 1.8% சதவிகிதம் சமத்துவ மக்கள் கட்சி, 1.5% சதவிகிதம் நாம் தமிழர் மீதம் உள்ளவர்கள் சிலர் கருத்து கூற மறுத்து விட்டனர், மேலும் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் 2,870 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார், இதனால் இம்முறை அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பாண்டுரங்கன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கின்றனர்.