ட்வீட் போட்டவர் மீது உறுதியான குண்டர் சட்டம், குண்டு போட வந்தவர்களுக்கு செல்லாது.! சர்ச்சைக்குரிய அறிவுரைக்கழகம் தீர்ப்பு.

0
Follow on Google News

திமுக தலைவர்கள் குறித்தும் அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கிஷோர் கே சுவாமி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு பரப்பியதாக அடுத்தடுத்து புகார்கள் வந்ததை தொடர்ந்து கிஷோர் கே சுவாமி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, கிஷோர் கே சாமி ஜாமீன் கோரி தாம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறிவுரை கழகத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த அறிவுரைக்கழகம் கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்தது. அறிவுரைக்கழகம் கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கடந்த 2020 வருடம் ஜனவரி 26ம் தேதி அதிகாலையில் சென்னையில் துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடைபெற்றுள்ளது. மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தி இல்லம் அருகே அதிகாலை 3 மணிக்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், குண்டு வீச வந்தவர்களை விரட்டியதால், அவர்கள் தப்பியோடினர்.

இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் அங்கே ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 10 பேரை கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 2020 வருடம் பிப்ரவரி 20ம் தேதி உத்தரவிட்டார்.இந்நிலையில் 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து தொடர்பாக தமிழ்நாடு அறிவுரை கழகம் விசாரணை நடத்தியது.

இந்த வழக்கை விசாரித்த அறிவுரை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்கள் 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு செல்லாது என அறிவுரை கழகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டி தற்போது குண்டு வீச வந்தவர்கள் மீது குண்டர் சட்டம் செல்லாது என தீர்ப்பு அளித்த அறிவுரை கழகம், டிவீட்டரில் பதிவு போட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை உறுதி செய்துள்ளது என பொது தளத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.