அதிமுக மீண்டும் இரண்டாக உடைபட்டு இருக்கும் நிலையில் சிவி சண்முகம் தலைமையில் ஒரு குழுவினரும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு குழுவினரும் முட்டி மோதி கொண்டிருக்கிறார்கள் . இதன் பின்னணியில் நடந்த பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. குறிப்பாக சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஆட்சி அமைக்க போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் தத்தளித்து கொண்டிருந்தது தவெக.
இதனைத் தொடர்ந்து ஒரு வழக்கறிஞர் வீட்டில் ஆதவா அர்ஜுனா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவருமே ரகசியமாக சந்தித்து பேசி இருக்கிறார்கள், அப்போது ஆதவ் அர்ஜுனா எடப்பாடி பழனிச்சாமி இடம் தங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுங்கள் உங்களுக்கு அமைச்சரவையில் பங்கு தருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும்,

அதனால் எனக்கு இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள் என்று நம்பிக்கை இல்லாமல் பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனை தொடர்ந்து எடப்பாடி மூலம் அதிமுகவை உள்ளே இழுப்பதற்கான வேலை கைகூடவில்லை என்பதை உணர்ந்த தமிழக வெற்றி கழகம் செங்கோட்டையின் மூலமாக காய்களை நகர்த்தி இருக்கிறது.
செங்கோட்டையன் எஸ்.பி வேலுமணியிடம் பேச அதற்கு எஸ் பி வேலுமணி தற்போது கொங்கு மண்டலத்தில் அதிமுக கைவசம் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை, முழுக்க முழுக்க சீவி சண்முகம் கைவசமே சுமார் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் சீவி சண்முகத்திடம் கேட்டு முடிவு செய்கிறேன் நீங்களும் சி வி சண்முகத்திடம் பேசுங்க என்று எஸ் பி வேலுமணி செங்கோட்டையனிடம் பதில் தெரிவித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து சி வி சண்முகத்தை தொடர்பு கொண்டு செங்கோட்டையன் பேச அதற்கான வேலையை செய்கிறேன் என சி வி சண்முகம் உறுதியளித்து இருக்கிறார். இதற்கு இடையில் தாவேக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக முன்னிறுத்தி திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம் என்கின்ற முடிவை மு க ஸ்டாலின் எடுத்திருக்கிறார்.
இது குறித்து எடப்பாடியிடமும் கலந்து பேசி இருக்கிறார், மீண்டும் முதல்வராக போகிறோம் என மகிழ்ச்சியில் இருந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் திமுக கூட்டணியில் இருந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் NDA கூட்டணியில் இடம் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என தெரிவித்து இருக்கிறார்க்ள.
அதன் பின்பு ரஜினிகாந்தை முதல்வராக முன்னிறுத்தி காய்களை நகர்த்தலாமா என்கின்ற முடிவிலும் மு க ஸ்டாலின் இருந்திருக்கிறார், இதற்கு கனிமொழி இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று தெரிவிக்க, அதன் பின்பு அதிமுக – திமுக இருவரும் ஆதரிக்கும் வகையில் திருமாவளவனை முதல்வராக்க முடிவு செய்து இருக்கிறார் மு க ஸ்டாலின், அதற்கு எடப்பாடியும் சம்மதித்திருக்கிறார்.
இது குறித்து சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய சிவி சண்முகம், திமுகவுடன் கூட்டு சேர்ந்து எப்படி ஆட்சி அமைப்பது, தமிழக வெற்றி கழகத்திற்கு நாம் ஆதரவு கொடுத்து ஆட்சியில் பங்கு பெறுவோம் என்று போர்க்கடி தூக்கி இருக்கிறார் சி வி சண்முகம்.
இதற்கிடையில் சிவி சண்முகத்திற்கும் எடப்பாடிக்கும் இடையிலேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து தற்போது சி.வி சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக விற்கு ஆதரவு அளிக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

