கமல்ஹாசன் உடன் இணைந்து ஒவைசி மூன்றாவது அணி..! ஸ்டாலினின் முதல்வர் கனவுக்கு ஆப்பு.!

0
Follow on Google News

பிஹாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஐதராபாத் எம்.பி.யான ஒவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹாதுல் முஸ்லிமீன்(ஏஐஎம்எம்ஐஎம்) கட்சி போட்டியிட்டு, பிகாரில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்தமையால் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதை காரணம் காட்டி மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின் இருவரையும் தன்னை கூட்டணியில் இணைக்கவில்லை என்றால் தனியாக போட்டியிட்டு முஸ்லீம் வாக்குகளை பிரிப்பேன் என அசாதுதீன் ஒவைஸி மிரட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் முடிந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 16 தொகுதிகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றிருந்தது. இதன் பின்னணியில் ஐதராபாத் எம்.பி.யான ஒவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹாதுல் முஸ்லிமீன்(ஏஐஎம்எம்ஐஎம்) கட்சியால் பிரிந்த முஸ்லிம் வாக்குகள் காரணமாகப் பேசப்படுகிறது. இதனை தொடர்ந்து 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 15 முதல் 20 தொகுதி வரை போட்டியிட அசாதுதீன் ஒவைஸி விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால் திமுக தரப்பில் ஓன்று அல்லது அதிகபட்சம் இரண்டு தொகுதி தான் ஒதுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதற்கு அசாதுதீன் ஒவைஸி தரப்பில் இருந்து முஸ்லிம்கள் தயவு இல்லாமல் திமுக ஆட்சியில் அமர முடியாத சூழல் உருவாகி உள்ளது, திமுகவை ஆட்சியில் அமர வைக்க முக்கிய காரணமாக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஓன்று அல்லது இரண்டு தொகுதியா, இதுவரை தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களை திமுக ஏமாற்றி வந்திருக்கிருக்கலாம், ஆனால் இனி நடக்காது என்றும், நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் முன்றாவது அணி அமைத்து போட்டியிடுவோம் என அசாதுதீன் ஒவைஸி தரப்பில் இருந்து திமுகவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் முன்றாவது அணி அமைக்கும் பணியில் அசாதுதீன் ஒவைஸி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் திமுகவுடன் அசாதுதீன் ஒவைஸி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தும் முன்பே மூன்றாவது அணி அமைப்பது குறித்து கமல்ஹாசன் உடன் பேசி முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் தலைமையிலான அசாதுதீன் ஒவைஸியின் மூன்றாவது அணியில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இடமில்லாத காட்சிகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முஸ்லீம் வாக்குகளை பெருமளவில் நம்பி இருந்த திமுகவுக்கு அசாதுதீன் ஒவைஸியின் மூன்றாவது அணி பற்றிய செய்தி பெரும் இடியாக விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.