எதிர்க்கட்சியினர் மத்தியில் கூட நற்பெயரை பெற்ற PTR பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், மிஸ்டர் கிளீன் என்று பெயர் எடுத்த பிடி ஆருக்கா இந்த நிலைமை என்று பரிதாபப்படும் வகையில் சூழல் அமைந்துள்ளது. குறிப்பாக மீண்டும் திமுக ஆட்சியை அமைத்தே தீர வேண்டும் என்று பல வியூகங்களை வகுத்து வருகிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.
அந்த வகையில் சீட்டிங் அமைச்சர்கள் சிலர் தொகுதி மாற்றப்பட இருக்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது . அந்த வகையில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து பத்து வருடம் இருந்து வரும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை உட்கட்சி அரசியலில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தொகுதிக்குட்பட்ட மாவட்ட செயலாளர் கோ தளபதியிடம் நெருக்கம் இல்லாமல் முரண்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் திமுகவின் மதுரை முகமாக உருவெடுத்துள்ள அமைச்சர் மூர்த்திக்கும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையிலான உட்கட்சி பூசல் உச்ச கட்டத்தை எட்டி இருக்கிறது என்கிறது மதுரை அரசியல் வட்டாரங்கள், அது மட்டும் இல்லாமல் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் எந்த ஒரு சிக்கலிலும் சிக்காமல் தன்னுடைய பெயரை இன்றளவும் காப்பாற்றிக் கொண்டாலும் கூட,
அவரை சுற்றி இருக்கும் ஆதரவாளர்கள் பல்வேறு முறைகேடுகளில் சிக்கி பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயரை மிகப் பெரிய அளவில் மதுரை மக்கள் மத்தியில் டேமேஜ் செய்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பி டி ஆர் ஆதரவாளரான மதுரை மேயர் இந்திராணி மற்றும் அவருடைய கணவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் மேயர் பதவியும் இந்திராணியிடமிருந்து பறிக்கப்பட்டது, அது மட்டுமல்லாமல் மதுரை மாநகராட்சியில் சுமார் 200 கோடி ரூபா அளவில் மிகப்பெரிய அளவில் ஊழல் அரங்கேறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் மண்டல் தலைவர்கள் பலரும் ராஜனமா செய்ய உத்தரவிட்டார் முதல்வர் மு க ஸ்டாலின், இப்படி பிடிஆரின் ஆதரவாளரான மேயர் தலைமையிலான மாநகராட்சியின் ஊழல் மதுரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய அவப்பெயரை திமுகவுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது.
மதுரை மத்திய தொகுதியில் பி டி ஆர் போட்டியிடும் பட்சத்தில் அங்கே நடக்கும் உட்கட்சி பூசல் மட்டுமில்லாமல், அவருடைய ஆதரவாளர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் அவர் பெயர் என, பி டி ஆர் வெற்றி பெறுவது அவரது எளிமையான காரணம் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள், அதே நேரத்தில் மதுரையிலிருந்து பி டி ஆர் தரப்பு மற்றும் அமைச்சர் மூர்த்தி இருவருக்கும் இடையிலான திமுக உட்கட்சி பூசலை முடிவு கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது திமுக தலைமை.
மதுரையிலிருந்து பி டி ஆர் ஐ சென்னைக்கு மாற்றம் செய்ய வைத்து சென்னையிலேயே தங்க வைத்துக் கொள்ளலாம் என்று திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும், அந்த வகையில் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் வரும் சட்டசபை தேர்தலில் பி டி ஆர் பழனிவேல் ராஜன் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பிடிஆர் தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்ட கூடிய அளவுக்கு மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான அவர், நகர் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு தொகுதியில் அவர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெள்ளாளர் சமூகம் அதிகம் உள்ள மதுரை மத்திய தொகுதியில் அதே சமூகத்தை சேர்ந்த முன்னாள் மேயர் முத்துவின் குடும்ப உறுப்பினருக்கு மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

