பெண்களை இழிவுபடுத்தும் திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த மோடி. மக்களை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

0

தமிழகத்தில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இன்று தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. சட்டமன்ற தேர்தல் நடைபெற ‌இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சியான பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர்கள் மற்றும் தேசிய உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், கருத்து கணிப்புகள் பெரும்பாலும் அடுத்தது யார் ஆட்சி அமைப்பது என்பதில் கடும் இழுபறியில் இருப்பதாகவே தெரிவித்து வருகின்றனர்.

திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பிரச்சாரத்தை முறியடிக்க பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வந்தார் பிரதமர் மோடி.

தாராபுரம் உடுமலைப்பேட்டை சாலையில் உள்ளஅமராவதி மைதானத்தில் பிரம்மாண்ட பிரச்சார பொது கூட்டம் ஏற்படு செய்யப்பட்டு இருந்தது. இந்த பிரம்மாண்ட பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இன்று காலை சரியாக 11.00 மணிக்கு வந்தடைந்தார். பிரதமர் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைமைகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி பேசுகையில் நான் தமிழ் மொழி பேசுவது எனக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, காலிங்கராயன், பொல்லான் போன்ற விடுதலை வீரர்களை கொடுத்த ஒரு பழைமையான நகருக்கு நான் வந்துள்ளது பெருமையாக உள்ளதாகவும், இந்தியாவில் பெருமிதம் கொள்ளும் கலாச்சாரம் என்றால் தமிழகம் தான் என்று பிரதமர் மோடி பெருமிதம் கொண்டார். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்தார்.

தாராபுர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பாதை இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதாக மோடி உறுதி அளித்தார். மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறதாக கூறினார். மேலும் திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே பெண்களை இழிவாக பேசி வருகிறார்கள், இவர்கள் செய்யும் தவறுகளை திமுக தலைமைகள் கண்டிக்க வேண்டும், திமுக ஆட்சியில் தான் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது என்று மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கடைசியில் பிரதமர் மோடிக்கு வெற்றி வேல் பரிசாக வழங்கப்பட்டது.