கடந்த 2026 சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் மதுராந்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார், இதனை தொடர்ந்து மதுராந்தகம் சட்டசபை தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்ட நிலையில் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம் , தாராபுரம் ஆகிய இரண்டு காலியாக உள்ள சட்டசபை தொகுதிக்கு இடைதேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் தேதி அறிவித்த அடுத்து சிலமணி நேரத்தில் திமுக சார்பில் இரண்டு இடைதேர்தலுக்குமான வேட்பாளர் அறிவிக்கப்பட்டது, அந்த வகையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் சென்னை எக்மோர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பரந்தமானை மதுராந்தகம் தொகுதியின் வேட்பாளராக அறிவித்து இருக்கிறது திமுக, இவர் கடந்த 2016 சட்டசபை தேர்தலின் பூந்தமல்லி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.

கடைசியாக நடந்த 2026 சட்டசபை தேர்தலில் பரந்தாமனுக்கு தேர்தலில் போப்ட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை திமுக தலைமை, இதற்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் பரந்தாமன் இடையில் நடந்த கோஷ்டி பூசல் தான் என்றும், அப்போது சேகர்பாபு கை திமுகவில் ஓங்கி இருந்ததால், பரந்தாமனுக்கு சீட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது, அந்தவகையில் நன்கு பேச்சாற்றல் கொண்ட பரந்தாமன்,
தற்பொழுது திமுக தலைமைக்கும், திமுக முதல் குடும்பத்துக்கும் எதிராக வரும் அரசியல் தாக்குதலை, ஒரு கவசமாக இருந்து தன்னுடைய பேச்சாற்றல் மூலம் எதிர் தாக்குதல் நடத்தி வரும் பரந்தானுக்கு, பொது தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து இருக்கிறது திமுக, இந்நிலையில் கடந்த 2026 மதுராந்தகம் சட்டசபை தேர்தல் முடிவுகளில் திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
அங்கே அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், அதற்கு அடுத்ததாக தவெக வேட்பாளர் மிக கடுமையான போட்டியை கொடுத்து சுமார் 62 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், மூன்றாவது இடத்தில், திமுக வேட்பாளர் சுமார் 59 ஆயிரம் வாக்குகள் பெற்று இருந்தார். இந்நிலையில் அதிமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சிகளுமே மதுராந்தகம் தொகுதியில் தங்கள் பலத்தை கடந்த 2026 தேர்தலில் நிரூபித்து இருக்கிறது.
இதில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் தன்னை தவெக வில் இணைந்து கொண்ட போது, மதுராந்தகம் தொகுதியில் உள்ள அதிமுகவினர் பெரும்பாலானவர் தவெக வில் இணைந்து இருக்கிறார்கள். மேலும் அதிமுகவுக்கு மதுராந்தகம் தொகுதியில் விழுந்த வாக்குகள் பெரும்பாலும் திமுக எதிர்ப்பு வாக்குகள் என்பதால், வரும் இடைதேர்தலில் அந்த வாக்குகள் திமுகவுக்கு செல்ல வாய்ப்பில்லை.
மேலும் திமுகவை வீழ்த்தி அதிமுக ஆட்சியை பிடித்துவிடும் என்கிற நம்பிக்கையில் பலரும் மதுராந்தகம் தொகுதியில் அதிமுகவுக்கு வாக்களித்தார்கள், இப்படியான சூழலில் நடைபெறும் இடைதேர்தலில் தவெக – திமுக நேரடி போட்டியாக உருவெடுத்து இருக்கிறது, இதில் அதிமுகவுக்கு ரோல் இல்லை அப்படி இருக்கையில், தவெக சார்பில் மரகதம் குமரவேல் மட்டுமில்லை யார் வேட்பாளராக தவெக நிறுத்தினாலும் மதுராந்தகம் தொகுதியில் தவெக வுக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது.
அந்த வகையில் தவெக ஆட்சிக்கு வந்த பின்பு மக்கள் மத்தியில் எந்த மாதிரியான செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் தவெகவுக்கு இந்த இடைதேர்தல் ஒரு பலபரிச்சை என்றே சொல்லலாம், அதே நேரத்தில் திமுகவுக்கும் இந்த இடைதேர்தல் என்பது, சரிந்து சோர்ந்து கிடக்கும் திமுக தொண்டர்களுக்கும், சரிவில் இருக்கும் திமுகவை மீட்டெடுக்கவும் ஒரு வாய்ப்பாகவே இந்த இடைதேர்தல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

